இந்த ரயிலில் பயணித்தால் 3 வேளையும் சுடச்சுட உணவு இலவசம்! ஒரு பைசா கூட கொடுக்க வேண்டாம்!

Published : Apr 07, 2025, 06:31 PM IST

இந்தியாவில் ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு மூன்று வேளையும் சுடச்சுட இலவச உணவு வழங்கப்படுகிறது. இது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

PREV
14
இந்த ரயிலில் பயணித்தால் 3 வேளையும் சுடச்சுட உணவு இலவசம்! ஒரு பைசா கூட கொடுக்க வேண்டாம்!

Free food on the Sachkhand Express train: இந்தியன் ரயில்வே உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க் ஆக உள்ளது. தினமும் பல லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். இந்தியாவில் சாதாரண பயணிகள் ரயில் முதல் வந்தே பாரத் வரையிலான அதிவேக சொகுசு ரயில்கள் வரை இயக்கப்பட்டு வருகின்றன. இதில் ஏராளமான ரயில்களில் உள்ளேயே கேட்டரிங் ([பேன்ட்ரி கார்) அமைக்கப்பட்டு பயணிகளுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
 

24
Free food on the Sachkhand Express train

பேன்ட்ரி கார் இல்லாத ரயில்களில் பயணிக்கும் பயணிகள் ரயில் நிலையங்களில் உணவு வாங்கி சாப்பிடுகின்றனர். இது மட்டுமின்றி ஐ.ஆர்.சி.டி.சி மூலம் உங்களுக்கு பிடித்தமான உணவக‌ங்களில் உணவு ஆர்டர் செய்தால் உங்கள் இருக்கைக்கே அந்த உணவு வந்து விடும். ஆனால் இந்தியாவில் ஒரு ரயிலில் பயணித்தால் உணவு இலவசமாக வழங்கப்படும் என்பது உங்களுக்கு தெரியுமா?

அந்த ரயில் அமிர்தசரஸ்-நாந்தேட் இடையே இயக்கப்படும் சச்கண்ட் எக்ஸ்பிரஸ் ஆகும். மொத்தம் 39 ரயில் நிலையங்களில் நின்று செல்லும் இந்த ரயில் 2081 கி.மீ தூரத்தை 33 மணி நேரத்தில் கடக்கிறது. இந்த ரயிலில் பயணிக்கும் பயணிகள் கடந்த 29 ஆண்டுகளாக காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் சுடச்சுட இலவச உணவு பெற்று வருகின்றனர்.இந்த ரயிலில் பயணம் செய்தால், நீங்கள் உணவை எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. 

இனி சென்னை டூ திருச்சி 3 மணி நேரத்தில் செல்லலாம்! தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு!

 

34
Amritsar-Nanded Express Train

இந்த ரயில் 39 நிலையங்களில் நிற்கும் நிலையில் 6 ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது. அதாவது ரயில் நிலையத்தில் ஒரு இடத்தில் இலவச உணவு பரிமாறப்படும். சச்கண்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்கும் பயணிகள் தாங்கள் வைத்திருக்கும் டிபன் பாக்ஸ் உள்ளிட்ட பாத்திரங்கள் மூலமாக இலவச உணவை வாங்கிக் கொள்ளலாம். பொதுப் பெட்டிகள் முதல் ஏசி பெட்டிகள் வரை உள்ள அனைத்து பயணிகளும் தங்கள் சொந்த பாத்திரங்களை கொண்டு சென்று இலவச உணவை வாங்கிக் கொள்கின்றனர்.

44
Indian Railway


புது தில்லி மற்றும் டாப்ரா நிலையங்களில் இருபுறமும் இலவச உணவு வழங்கப்படுகிறது. கதி-சாதம், கொண்டைக்கடலை, பருப்பு, கிச்சடி மற்றும் உருளைக்கிழங்கு-காலிஃபிளவர் அல்லது பிற காய்கறிகள் என சத்தான உணவுகள் சுடச்சுட வழங்கப்படும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான உணவுகள் வழங்கப்படும். இந்த இலவச உணவுகளை குருத்வாராக்கள் வழங்கி வருகின்றன. இந்த உணவுக்கான செலவுகள் குருத்வாராக்களால் பெறப்படும் நன்கொடைகள் மூலம் பூர்த்தி செய்யப்படுகின்றன.

இனி ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் ரயில்களின் முழு லிஸ்ட் இதோ!

Read more Photos on
click me!

Recommended Stories