'பெரிய காயத்துக்கு சிறிய பேண்டேஜ்'; மத்திய பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி கருத்து!
மத்திய பட்ஜெட் குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியை தீர்க்க மத்திய அர்சு ஏதும் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.
மத்திய பட்ஜெட் குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியை தீர்க்க மத்திய அர்சு ஏதும் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2025 26ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 36 உயிர்காக்கும் மருந்துகளுக்கு முழுவதுமாக அடிப்படை சுங்கவரி விலக்கு, அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் புற்றுநோய் சிகிச்சை மைய வசதி, லித்தியம் பேட்டரிக்கான இறக்குமதி சுங்கவரி ரத்தால் மின்சார வாகனங்களில் விலை குறைதல் என பட்ஜெட்டில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன.
அதே வேளையில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியில் இடம்பெற்றுள்ள பீகார் மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு அதிக திட்டங்கள் வாரி இறைக்கப்பட்டுள்ளன. அதுவும் இது பீகார் மாநில பட்ஜெட் என சொல்லும் அளவுக்கு அந்த மாநிலத்துக்கு அதிக திட்டங்கள், அதிக நிதி ஒதுக்கீடு செய்யபப்பட்டுள்ளன. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய தென் மாநிலங்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளன.
இந்திய குடிமகனின் கனவு; மக்களுக்கான பட்ஜெட் இது - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்!
தமிழ்நாடு என்ற ஒரு வார்த்தை கூட நிதியமைச்சரின் வாயில் இருந்து உச்சரிக்கவில்லை. இதேபோல் ரயில்வே என்ற வார்த்தையும் உச்சரிக்கப்படவில்லை. ரயில்வே திட்டங்கள் ஒன்று கூட அறிவிக்கப்படவில்லை. பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மத்திய பட்ஜெட்டில் ஒரு திட்டமும் இல்லை என விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''துப்பாக்கிச் சூட்டு காயங்கள் போன்ற பெரிய காயங்களுக்கு சிறிய பேண்டேஜ் போடுவது போல் மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது.
உலகளாவிய நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், நமது நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு ஒரு முன்னுதாரண மாற்றம் தேவைப்பட்டது. ஆனால் மத்திய அரசின் பட்ஜெட் எந்தவித யோசனைகளும் இல்லாமல் திவாலாக உள்ளது'' என்றார்.