ராகுல் காந்தி நேரில் ஆறுதல்
இந்நிலையில், இன்று ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் வந்த எதிர்க்கட்சித தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்தவர்களை சந்தித்து பேசினார். பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்ரீநகரின் பதாமிபாக் கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு சென்ற ராகுல் காந்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்கும்படி உத்தரவிட்டார்.
ஒற்றுமையாக நிற்பது அவசியம்
மேலும் ஜம்மு-காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா மற்றும் முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோரையும் நேரில் சந்தித்து ராகுல் காந்தி பேசினார். அப்போது சம்பவம் குறித்து இருவரும் ராகுல் காந்தியிடன் விளக்கினார்கள். பின்பு இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி,''பயங்கரவாதிகள் செய்ய முயற்சிப்பதை நாம் முறியடிக்க ஒவ்வொரு இந்தியரும் ஒற்றுமையாக, நிற்பது மிகவும் முக்கியம். காஷ்மீர் மற்றும் நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்த எனது சகோதர சகோதரிகளை சிலர் தாக்குவதைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது'' என்றார்.
பஹல்காம் தாக்குதலுக்கு மூளை ஹபீஸ் சயீத்! உதவி செய்தது பாகிஸ்தான் உளவுத்துறை! பகீர் தகவல்!