சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் பள்ளி மாணவர்கள்.! இனி புத்தகத்தை பார்த்தே தேர்வு எழுதலாம்- அசத்தலான அறிவிப்பு

Published : Aug 11, 2025, 09:00 AM IST

சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் பாடப்புத்தகங்களைப் பார்த்து தேர்வு எழுதும் புதிய முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த முறையின் மூலம் மாணவர்களின் சிந்திக்கும் திறனை வளர்க்கும் வகையில், புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதலாம்.

PREV
14
மாணவர்களின் கல்வி முறை

கல்வி தான் மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய ஆயுதமாக உள்ளது. அந்த வகையில் வாழ்க்கை நடைமுறையோடு கல்விகள் தேவை என்பது பெரும்பாலனவர்களின் கருத்தாக உள்ளது. ஆனால் ஒரு சில பாடங்கள் எந்த வித பயனையும் கொடுக்காத வகையில் அமைக்கப்பட்டு இருக்கும். 

இதனை மத்திய அரசின் கல்வி நிலையங்கள் மற்றும் மாநில அரவின் பள்ளிக்கல்வித்துறை அவ்வப்போது மாற்றம் செய்து வருகிறது. மேலும் பள்ளி மாணவர்கள் தேர்வின் போது பாடங்களை புரிந்து படிக்காமல் மொட்டை மனப்பாடம் செய்து தேர்வு எழுதுகிறார்கள். இதனால் மாணவர்களுக்கு எந்த வித பயனும் இல்லாத நிலை நீடித்து வருகிறது. எனவே தேர்வின் போது மாணவர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் புதிய, புதிய திட்டங்களை கல்வி துறை ஆலோசித்து வருகிறது.

24
சிபிஎஸ்சி பாடத்திட்டம்

அந்த வகையில் மத்திய அரசின் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் நாடுமுழுவதும் 29,009 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் சுமார் 2.6 கோடி மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் 9 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்கள் 53 லட்சம் பேர் படிக்கின்றனர். இந்த நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு மத்திய அரசால் அமல்படுத்தப்பட்ட தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் பாடத்திட்டம், 

தேர்வு முறைகளில் சிபிஎஸ்இ பல்வேறு மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்தது. இதன் படி ஒவ்வொரு திட்டங்களையும் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தேர்வின் போது மாணவர்கள் அதாவது முதல் கட்டமாக 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பாட புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதும் முறை கொண்டு வர திட்டமிட்டது.

34
புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் முறை

இதன் முதல் கட்டமாக 2026-2027ஆம் கல்வி ஆண்டு முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதும் முறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. திறந்த புத்தக மதிப்பீடுகளை ஒருங்கிணைக்கும் புதிய திட்டத்துக்கு சி.பி.எஸ்.இ. ஒப்புதல் வழங்கி உள்ளது.

இதன் படி மொழிப்பாடங்களான தமிழ் மற்றும் ஆங்கிலம் மற்றும் அந்த அந்த மாநில மொழிகள், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகளை மாணவர்கள் புத்தகத்தைப் பார்த்து எழுதலாம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

44
9ஆம் வகுப்பு தேர்வு முறை

எனவே 9ஆம் வகுப்பு மாணவர்கள் அடுத்த ஆண்டு முதல் பாடப் புத்தகங்கள், வகுப்பறையில் எடுத்த குறிப்புகள், நூலகப் புத்தகங்களைக் கொண்டு தேர்வு எழுதலாம் என சிபிஎஸ்சி தெரிவித்துள்ளது. இந்த புதிய முறையின் மூலம் மாணவர்களின் சிந்திக்கும் திறனை வளர்க்கும் வகையில் புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதும் முறை அறிமுகம் செய்யப்படுவதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. 2026-27ஆம் கல்வியாண்டில் முதல் கட்டமாக 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அமல்படுத்தப்படவுள்ள இந்த முறை விரையில் அனைத்து வகுப்புகளுக்கும் கொண்டுவரப்படும் என கூறப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories