முதல் நாளில் பஞ்சாங்க பூஜை, மண்டப பிரவேசம், கிரக யோகம், அக்னி ஸ்தாபனம், வன பூஜை, ஜலாதவாசம் போன்ற சடங்குகள் செய்யப்பட்டன. காசி ஜெய்பிரகாஷ் தலைமையில் 101 வேத பண்டிதர்கள் இவற்றை செய்தனர். புதன்கிழமை வேதி பூஜை, ஷோடஷ மாதிரிகா, யோகினி பூஜை, நவக்கிரக பூஜை, யாக குண்ட சடங்குகள், அக்னி ஸ்தாபனம் போன்றவை நடைபெறும். சிலைகளுக்கான சடங்குகளும் தொடங்கும்.