பல தடைகள்... இன்னல்கள் கடந்து 20 வருடத்திற்கு பின் திறக்கப்பட அடல் சுரங்க பாதை..! நீங்கள் அறிந்திடாத தகவல்கள்!

First Published Oct 3, 2020, 12:01 PM IST

20 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த அடல் சுரங்கப்பாதையை பாரத பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து, "அடல் சுரங்கப்பாதையை திறந்து வைப்பது தனக்கு கிடைத்த பாக்கியம் என கூறியுள்ளார்". அடல் சுரங்கப்பாதை பற்றி நீங்கள் அறிந்திடாத சில தகவல்கள் இதோ...
 

உலக நாடுகளில் இதுவரை கட்டப்பட்டிருக்கும் சுரங்கப்பாதையைக் காட்டிலும் மிக நீளமான சுரங்க வழி பாதை தான் தற்போது இந்தியாவில் கட்டப்பட்டிருக்கும் அடல் சுரங்கப்பாதை.
undefined
முன்னாள் பிரதமர் அடல் பிகார் வாஜ்பாயின் நினைவாக இந்த சுரங்கப்படத்திக்கு அடல் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
undefined
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3100 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இந்த சுரங்க வழி பாதை இமாசலத்தின் மணாலிக்கும், லடாக்கின் லே பகுதிக்கும் இடையில் கட்டப்பட்டுள்ளது.
undefined
இதன் நீளம் சுமார் 8.8 கிமீ ஆகும். இந்த சுரங்கப்பாதை ரோடங் என்ற பெயரிலும் அழைக்கப்படுகின்றது.
undefined
கடந்த ஓரிரு மாதத்திற்கு முன் 20 வருடங்களாக கட்டப்பட்டு வந்த இந்த சுரங்க வழி பாதையின் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்ட நிலையில் இன்று முதல் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
undefined
இந்த சுரங்கப்பாதையில் பாதுகாப்பு வசதிகளாக சிசிடிவி கேமிரா ஒவ்வொரு 60 மீட்டர்களுக்கும் பொருத்தப்பட்டிருக்கின்றன.இதேபோன்று, அவசர வெளியேறும் வழியும் ஒவ்வொரு 500 மீட்டர்களுக்கும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
undefined
அனைத்து காலகட்டங்களையும் எதிர்கொள்ளும் விதத்தில் இந்த சுரங்க பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தீ விபத்துகளைத் தடுக்கும் விதமாக தீயணைப்பு கருவிகளும் சுரங்கப்பாதையில் நிறுவப்பட்டிருக்கின்றன.
undefined
இதுமட்டும் இன்றி பொதுமக்களின் பாதுகாப்பபு கருதி பல்வேறு வசதிகள் இந்த சுரங்கத்தில் நிறுவப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
undefined
"லே-வை இணைக்கும் முதல் படியாக இந்த சுரங்கப்பாதை உருவாக்கப்பட்டுள்ளது. இது உருவாக்குவது அவ்வளவு எளிதான விஷயமாக அமைந்திடவில்லை. பல இன்னல்களையும், தடைகளையும் கடந்து இதனை சாதித்துள்ளனர்.
undefined
தற்போது பயன்பாட்டில் இருக்கும் மலைப் பாதையைக் காட்டிலும் புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் சுரங்க வழி பாதை மிகவும் பாதுகாப்பானதாகும்.
undefined
பொதுவாக மலைப் பாதை என்றாலே ஆபத்தானதுதான். ஆனால் அடல் சுரங்க பாதை மக்களின் நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்தும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
undefined
மிக முக்கியமாக அதிகளவில் அரங்கேறும் விபத்தைக் குறைக்கும் நோக்கில் அடல் சுரங்கப்பாதை உருவாக்கப்பட்டிருக்கின்றது என்றே கூறலாம்.
undefined
பல்லாயிரம் தொழிலாளர்கள் உழைப்பில்... பல தடைகள், கஷ்டங்களை கடந்து இன்று பிரதமர் மோடியின் கைகளால் திறக்கப்பட்டுள்ளது அடல் சுரங்க பாதை.
undefined
click me!