எமன் ரூபத்தில் வந்த அரசு பேருந்து! மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 5 பேர் உடல் நசுங்கி பலி! நடந்தது என்ன?

Published : Dec 03, 2024, 12:48 PM ISTUpdated : Dec 03, 2024, 02:10 PM IST

கேரளாவில் அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 5 மருத்துவ மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரில் பயணம் செய்த 7 பேரில் 2 பேர் படுகாயமடைந்தனர். மழை மற்றும் வேகமாக காரை இயக்கியதே விபத்துக்கு காரணம் என போலீசார் தெரிவித்தனர்.

PREV
14
எமன் ரூபத்தில் வந்த அரசு பேருந்து! மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 5 பேர் உடல் நசுங்கி பலி! நடந்தது என்ன?
kerala Accident

கேரள மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் பயிலும் மாணவர்கள் 7 பேர் காரில் கொச்சி சென்றுகொண்டிருந்தனர். ஆலப்புழா தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த போது கல்லர்கோட் அருகே சென்றபோது, எதிரே வந்த போது கேரள அரசு பேருந்து மீது கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர்பாராத கார் மோதியுள்ளது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியுள்ளது. 

24
KSRTC

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 5 கல்லூரி மாணவர்கள் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் படுகாயங்களுடன் கூச்சலிட்ட படியே உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

34
Medical Students

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் மற்றும் போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த கல்லூரி மாணவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  அனுப்பி வைத்தனர். 

44
Police investigation

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மழை பெய்துகொண்டிருந்தபோது காரை வேகமாக இயக்கியதும், மற்றொரு வாகனத்தை முந்தி செல்ல முயன்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதியது தெரியவந்தது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.

click me!

Recommended Stories