இந்நிலையில் இது குறித்து நடிகை ரோஜாவிடம் கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில் "விஜயின் அரசியல் வருகை மகிழ்ச்சியளிக்கின்றது. அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை, ஆனால் நான் அவருடைய கட்சியில் இணையப் போவதாக, தெலுங்கு தேசம் கட்சியினர் தான் வீண் வதந்திகளை பரப்பி வருகின்றனர். விஜயோடு நான் இணைவதற்கு எந்தவிதமான வாய்ப்பு இல்லை, இன்னும் சொல்லப்போனால் அவருக்கும் எனக்கும் பெரிய பழக்கமும் இல்லை".