குடியுரிமையை நிரூபிக்க ஆதார் கார்டு போதாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

Published : Jul 22, 2025, 10:43 PM IST

பீகார் தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் ஏராளமானோர் நீக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. உச்ச நீதிமன்றம் ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்டவற்றை செல்லுபடியாகும் ஆவணங்களாக ஏற்க பரிசீலிக்க உத்தரவிட்டாலும், தேர்தல் ஆணையம் அதை நிராகரித்துள்ளது.

PREV
14
உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்தின் பதில்

பீகார் மாநிலத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இந்தப் பணியின் போது ஏராளமான வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகச் சர்ச்சை எழுந்தது.

24
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு

இந்தத் திருத்தப் பணிகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆதார், வாக்காளர் அட்டை, அடையாள ரேஷன் கார்டு ஆகியவற்றை செல்லுபடியாகும் ஆவணங்களாகச் சேர்ப்பது குறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறும் தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த கருத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளவில்லை.

34
தேர்தல் ஆணையத்தின் மறுப்பு

“வாக்காளர் சிறப்புத் திருத்தத்தின் போது ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் நம்பகத்தன்மையற்றவை. ஆதார் என்பது ஒரு நபரின் அடையாளச் சான்று மட்டுமே. ஒரு நன்மையை பெற விரும்பும் ஒருவர் தான் யார் என்பதைக் காட்ட ஆதார் அட்டையைப் பயன்படுத்தலாம். பிரிவு 362-ன் கீழ் தகுதியை சரிபார்க்க ஆதாரைப் பயன்படுத்தும் சான்றாக உள்ளது. நாட்டில் ஏராளமான போலி ரேஷன் கார்டுகள் சுற்றி வருகின்றன” எனக் கூறியுள்ளது.

"பரவலாக இருப்பதால் 11 ஆவணங்களின் பட்டியலில் இது பரிந்துரைக்கப்படவில்லை. தற்போதைய வாக்காளர் அடையாள அட்டையைப் பயன்படுத்துவது சிறப்பு இயக்கத்தை பயனற்றதாக்கும்." என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

44
ராகுல் காந்தி தலைமையில் போராட்டம்

இதனிடையே, பீகாரில் இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடாளுமன்றத்தின் மகர் துவார் என்ற பகுதியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Read more Photos on
click me!

Recommended Stories