Vehicle Owners Alert: அக்டோபர் 1 முதல் அதிரடி.. இந்த ஒரு சான்றிதழ் இல்லையென்றால் ரூ.10,000 வரை அபராதம்

Published : Sep 30, 2026, 05:59 PM IST

Vehicle Owners Alert: கார் அல்லது பைக் வைத்திருப்பவர்கள் இந்தத் தகவலை தவறாமல் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அக்டோபர் 1 முதல் புதிய விதிகள் அமலுக்கு வருகிறது. இதை விரிவாக பார்க்கலாம்.

PREV
15
அக்டோபர் 1 முதல் வாகனங்களுக்கு புதிய விதிகள்

கார் அல்லது பைக் வைத்திருப்பவர்கள் இந்தத் தகவலைத் தவறாமல் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அக்டோபர் 1, 2026 முதல் வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழ் தொடர்பான சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. செல்லுபடியாகும் சான்றிதழ் இல்லாமல் வாகனம் இயக்கப்படுவது கண்டறியப்பட்டால், ஏற்கனவே உள்ள விதிகளின்படி ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். அது எங்கு என்பதை விரிவாக பார்க்கலாம்.

25
வாகன விதிகள்

வாகனம் வைத்திருப்பவர்களுக்கு டெல்லி அரசின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தலைநகரில் குளிர்காலம் தொடங்கும் காலத்தில் காற்று மாசு அதிகரிக்கும் நிலையில், வாகனங்களால் ஏற்படும் மாசைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, அக்டோபர் 1, 2026 முதல் செல்லுபடியாகும் மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு எதிராக சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா இதனை அறிவித்துள்ளார். முக்கியமாக பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி வாகனங்கள் செல்லுபடியாகும் மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.

35
பியுசி சான்றிதழ்

மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989-ன் விதி 115(7)ன்படி, வாகனம் முதல் முறையாக பதிவு செய்யப்பட்டது ஒரு ஆண்டு முடிந்த பிறகு செல்லுபடியாகும் மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயம். அதிகாரிகள் சோதனையின்போது அந்தச் சான்றிதழை கேட்கும்போது சமர்ப்பிக்க வேண்டும். மின்சார வாகனங்களுக்கு வெளியேற்றக் குழாய் மாசு இல்லாததால் இந்தத் தேவையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இப்போது முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டியது, சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு என்ன நடக்கும் என்பதுதான். அக்டோபர் 1 முதல் தொடங்கும் சிறப்பு கண்காணிப்பில் செல்லுபடியாகும் சான்றிதழ் இல்லாத வாகனங்கள் கண்டறியப்பட்டால், விதிகளின்படி அபராதம் மற்றும் வழக்குப்பதிவு நடவடிக்கை எடுக்கப்படலாம்.

ரூ.400 பொருள் வெறும் ரூ.199 மட்டுமே.. மிஸ் பண்ணாதீங்க.. டிமார்ட்டில் அதிரடி சலுகை

45
வாகன அபராதம்

அதிகாரிகள் தெரிவித்த தகவலின்படி, இப்படிப்பட்ட விதிமீறலுக்கு ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். எனவே, காலாவதியான சான்றிதழுடன் வாகனம் ஓட்டுவது இனி கவனிக்காமல் விடப்படும் விஷயமாக இருக்காது. இதோடு நடவடிக்கை சாலையில் மட்டும் நிற்கவில்லை. மாசுக் கட்டுப்பாட்டு சோதனை மையங்களின் இயக்க தொழில்நுட்பத்தின் மூலம் கண்காணித்து, அதை மேலும் நம்பகமானதாக மாற்ற டெல்லி அரசு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கிடையில், புராரியில் புதிய தானியங்கி வாகனச் சோதனை மையமும் தொடங்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு சுமார் 1 லட்சம் வாகனங்களை சோதிக்கும் திறன் கொண்ட இந்த மையத்தில் பிரேக், வாகனத் தாங்கு அமைப்பு, முகப்பு விளக்குகள், வாகனத்தின் கீழ்பகுதி மற்றும் மாசு வெளியேற்றம் உள்ளிட்டவை தானியங்கி முறையில் பரிசோதிக்கப்பட உள்ளன.

55
மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழ்

இதனால் டெல்லியில் வாகனம் வைத்திருப்பவர்கள் அக்டோபர் 1-ந்தேதிக்கு முன்னதாகவே தங்களது மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழ் செல்லுபடியாகும் என்பதை சரிபார்த்துக் கொள்வது முக்கியம். சான்றிதழ் காலாவதியாகியிருந்தால் உரிய மையத்தில் சோதனை செய்து புதிய சான்றிதழைப் பெறலாம். மேலும், சான்றிதழின் மின்னணு நகர டிஜிலாக்கர் அல்லது எம்-பரிவாஹன் போன்ற அரசின் மின்னணு சேவைகள் வைத்திருப்பது சோதனை நேரத்தில் உதவியாக இருக்கும். சிறிய கவனக்குறைவு பின்னர் பெரிய அபராதமாக மாறாமல் இருக்க, இப்போதே ஆவணத்தைச் சரிபார்ப்பது பாதுகாப்பான நடவடிக்கையாகும்.

Read more Photos on
click me!

Recommended Stories