Decorations: புத்தாண்டில் வீட்டை இப்படி ஜொலிக்க விடுங்க.. அதிர்ஷ்டம் கதவை தட்டும் !

First Published | Dec 29, 2022, 1:02 PM IST

புத்தாண்டு ஆண்டின் தொடக்கம் மட்டும் இல்லை, நம் வாழ்வின் புதிய அத்தியாயத்திற்குள் நுழையும் மற்றொரு தருணம். புதிய ஆண்டு நமக்கு அதிர்ஷ்டம், நல்லாசியை கொண்டு வரும் என எல்லோருக்குள்ளும் ஒரு நம்பிக்கை இருக்கும். அப்படிப்பட்ட நாளில் வீட்டை அழகாக அலங்கரித்தால் கண்களுக்கு மட்டும் அல்ல மனதுக்கும் புத்துணர்வு கிடைக்கும். 

வீட்டை சுத்தம் செய்து அழகுப்படுத்தும் முன்பு சில விஷயங்களை மனதில் வைத்து கொள்ள வேண்டும். அந்த பணிகளை முழு கவனத்துடனும் ஆர்வமாகவும் செய்தால் தான் பலன்களை அனுபவப்பூர்வமாக உணர முடியும். தூய்மைப் பணிகளை தொடங்கும் முன்னர் என்னவெல்லாம் செய்ய போகிறோம் என்பதை மனதில் திட்டமிட்டு கொள்ள வேண்டும். முடிந்தால் காகிதத்தில் குறிப்பு எடுத்து கொள்ளுங்கள். புத்தாண்டு கொண்டாட்டத்தினை தனியாக கொண்டாடுவதை விட உறவினர்கள், நண்பர்களை வீட்டுக்கு அழைத்து கொண்டாடும் போது இன்னும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். 

ஜொலிக்கும் ஜாடிகள் 

வெளிச்சம் இல்லாத இடத்தை தான் இருள் என்பார்கள். புத்தாண்டு வெளிச்சம் இல்லாத நாளாக மாறிவிடக் கூடாது. வண்ண விளக்குகளால் வீட்டை அலங்கரிப்பதில் கவனமாக இருங்கள். குட்டி விளக்குகளால் ஜொலிக்கும் பாட்டில்கள், மின்னும் ஜாடிகள், சீரியல் தோரணங்கள் ஆகிவற்றை கொண்டு வீட்டை அலங்காரம் செய்யுங்கள். 

இதையும் படிங்க; வாழ்க்கையை மாற்றும் 5 முடிவுகள் புத்தாண்டில் இந்த தீர்மானத்தை எடுங்க!

Tap to resize

தீம் பேஸ்டு அலங்காரம்! 

வீட்டை அலங்கரிக்கும்போது ஏதேனும் ஒரு தீம் (Theme) அடிப்படையில் அலங்காரம் செய்யலாம். அதாவது முழுக்க பூக்களால் அலங்காரம் செய்வது, மெழுகுவர்த்திகளால் ஒளியூட்டுவது, காகித கைவினை பொருள்களால் கவனம் ஈர்ப்பது, வண்ண விளக்குகளால் வீட்டை ஜொலிக்க வைப்பது உள்ளிட்ட தீம்களில் அலங்காரம் செய்யலாம். 

பொருள்களை அடையாளம் காணுதல்! 

வீட்டை அழகாக்க புதிய பொருள்களை வாங்குவதை வீட்டில் இருக்கும் பொருள்களில் இருந்து தொடங்க வேண்டும். தேவையான பொருள்கள், தேவையற்ற பொருள்கள் என்று அவற்றை பிரித்து அப்புறப்படுத்த வேண்டும். சுத்தமான வீடுதான் நிம்மதியான உணர்வுக்கு அடிப்படையாகும். 

ஆடைகள் 

ஒவ்வொரு புத்தாண்டிலும் வெவ்வேறு நிறங்கள் அதிர்ஷ்டத்தை தருவதாக நம்பிக்கை உண்டு. உங்களுக்கு விருப்பமான ஆடைகளை இந்தப் புத்தாண்டில் தேர்வு செய்யுங்கள். புத்தாண்டு விருந்துக்கு குடும்பம், நண்பர்கள் என அனைவரும் ஒரே மாதிரியான நிறத்தில் ஆடைகளை தேர்வு செய்து அணியுங்கள். இது உங்கள் உறவை இன்னும் நெருக்கமாக்கும். 

போட்டோ பிரேம் தயார்! 

வீட்டை ஈர்ப்புடன் அலங்கரிக்கப் பயன்படும் பொருட்களில் போட்டோ பிரேமிற்கு தனி இடமுண்டு. இதில் விருப்பமான புகைப்படங்களை வைத்து கொள்வது மனதினை இதமாக உணர வைக்கும். புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கு கொள்ள நண்பர்களையும் வீட்டிற்கு அழைத்து இருந்தால் அவர்களுடன் எடுத்துக் கொண்ட இனிமையான தருண புகைப்படங்களை போட்டோ பிரேமில் மாட்டி வைத்துக் கொள்ளுங்கள். இதை பார்க்கும் போது அவர்களது மனதிலும் குதூகலம் உண்டாகும்

குட்டி பேனர்! 

உங்கள் இல்லத்தில் ஒரு தனித்துவமான இடத்தை தேர்வு செய்து 'இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்' என எழுதப்பட்ட அட்டையோ அல்லது கட் அவுட்டையோ வையுங்கள். அதனுடன் நண்பர்கள் உறவினர்களுடன் எடுத்துக் கொண்ட கிரேசியான படங்களையும், குறிப்புகளையும் இணைத்துவிடுங்கள். இது புது ஆண்டின் நல்ல நினைவாக இருக்கும். 

ஹால் இப்படி வைங்க! 

வீட்டின் முன்புறம் இருக்கும் ஹாலில் குஷன் கொண்டு அலங்காரம் செய்யலாம். இது வீட்டை செலவில்லாமல் ஆடம்பரமாக காட்டும் யுக்தி. வீட்டின் ஷோபா, மெத்தைகள் மீது மென்மையான குஷனை வைத்து அழகூட்டலாம். 

பூ ஜாடி 

பூக்கள் நிறைந்த ஜாடிகளை வீட்டின் முக்கியமான இடங்களில் வைக்கும்போது வாசனை வீடு முழுக்க பரவி காணப்படும். வீட்டிற்கு வரும் உறவினர்களும் பூக்களை காணும் போது புத்துணர்வாக உணர்வார்கள். 

கோல்டன் பலூன்கள் பலூன்கள் பறப்பதை காணும் போது நம் மனதும் இலேசாகி பறப்பது போன்ற உணர்வை தரும். வீட்டில் கோல்டன் நிறத்தில் பலூன்களை தயார் செய்து பறக்க விடுங்கள். 

மேசையை அலங்கரியுங்கள் 

சாப்பாட்டு மேசையை அலங்கரிப்பது புத்தாண்டு கொண்டாட்டத்தில் முக்கிய இடம் பெறும். அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணும் போது அந்த இடம் வண்ணமயமாகவும், வெளிச்சமாகவும் இருந்தால் எப்படியிருக்கும்? குழந்தைகள் நிச்சயம் கொண்டாட்ட மனநிலைக்கு சென்று விடுவார்கள். அளவில் சிறிய சீரியல் பல்புகளை மேசையின் மத்தியில் படர விடலாம். மெழுகுவர்த்திகளை வரிசையாக அடுக்கி வைத்துக் கொண்டால் நல்ல தோற்றம் அளிக்கும். மேசை விரிப்புகளை புதியதாக மாற்றிக் கொள்ளுங்கள். 

இதையும் படிங்க; Relationship: உங்கள் திருமண உறவை வலுப்படுத்த புத்தாண்டில் இதை பண்ணுங்க போதும்!

Latest Videos

click me!