Relationship: உங்கள் திருமண உறவை வலுப்படுத்த புத்தாண்டில் இதை பண்ணுங்க போதும்!
ஒவ்வொருவர் வாழ்விலும் திருமண பந்தம் என்பது முக்கிய பங்காற்றுகிறது. தங்களின் இணையரை புரிந்து கொள்ள முயலுபவர்களின் உறவுதான் நீடித்து நிலைக்கிறது. அந்த உறவை மேலும் வலுவூட்ட இங்கு சில வழிகளை காணலாம்.
ஞாபகங்களை கொண்டாடுங்கள்!
திருமணமானவர்கள் தங்களுக்குள் நிகழ்ந்த அழகான நிகழ்வுகளை குறித்து உரையாடும்போது மகிழ்ச்சியாக உணர்கிறார்கள். இருவர் இணைந்து வாழும் போது அவர்களுக்குள்ளாக நிகழும் உரையாடல்கள் மிக முக்கியம். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும், உறவை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லவும் இந்த உரையாடல் அடித்தளமாக இருக்கும்.
ப்ரைவசியில் தலையிடாதீர்கள்!
கணவன் மனைவியாகவே இருந்தாலும், இருவரும் தனிப்பட்ட மனிதர்கள் தான். ஆகையால் ஒருவருக்கொருவர் தனியுரிமையை (Privacy) மதித்து வாழுங்கள். உடல் ஆரோக்கியத்தை பேணுவதில் இருவரும் இணைந்து செயல்படலாம். யோகா, தியானம், உடற்பயிற்சிகள் ஆகியவற்றை தம்பதியினர் இணைந்து செய்யும்போது மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் மேம்படும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க; Year Ender 2022: 2022 ஆம் ஆண்டில் மக்கள் அதிகம் பயணித்த டாப் 5 இடங்கள் ஒரு பார்வை!!
இணையரின் நண்பர்களை தெரிந்து கொள்ளுங்கள்!
உங்களுடைய இணையரின் நெருங்கிய நண்பர்களையும், அவருக்கு விருப்பமான உறவினர்களையும் தெரிந்துகொள்ளுங்கள். அவர்களுடன் நல்ல உறவை பேணுங்கள். இதனால் சுற்றமும், நட்பும் பெருகும். உங்கள் இணையரை மற்றவர்களுக்கு முன் விட்டுக் கொடுத்து பேசாதீர்கள். அவர்களின் நல்ல விஷயங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
மனதை இலகுவாக வைத்து கொள்ளுங்கள்!
உங்கள் கணவரோ, மனைவியோ பேசும் போது அவர்களை கவனியுங்கள். முடிவுகள் எடுக்கும் போது ஒருவரை ஒருவர் கலந்தாலோசித்துக் கொள்ளுங்கள். உங்கள் மனைவி உங்களோடு பகிர்ந்து கொள்ளும் விஷயங்களை காது கொடுத்து கேளுங்கள். எவ்வளவு கோபமாக இருந்தாலும் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துங்கள். உங்கள் இணையரை காயப்படுத்தும் விதத்தில் விவாதங்களை கொண்டு செல்லாதீர்கள். வெளிப்படையாக பேசி பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க ; புத்தாண்டு முதல் உடல் எடையை குறைக்க விருப்பமா? இந்த விதையை பற்றி தெரிஞ்சுக்கோங்க..!!
இணைந்து சமையுங்கள்!
பிடித்தமானவரின் சின்ன தொடுகைகள் கூட கிளர்ச்சியை ஏற்படுத்தும். உங்கள் இணையரின் பிடித்தமான விஷயங்களை தெரிந்து கொண்டு அதன்படி நடந்து கொள்ளுங்கள். உங்கள் இணையரின் கடந்த காலத்தை விட்டுவிடுங்கள். அவரோடு மகிழ்ச்சியாக இருக்க நிகழ்காலத்தை கொண்டாடுங்கள். இக்கணம் தான் நிஜம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்கள் மனைவியுடன் இணைந்து அவ்வப்போது சமையல் செய்யுங்கள். மனம் புண்படாத நகைச்சுவைகளை கூறி அவரை சிரிக்க வையுங்கள். நேரமிருக்கும் போது வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்
தாம்பத்ய உறவில் நெருக்கம்!
உடலுறவை தவிர்த்து பிற நேரங்களிலும் இணையர் மீது அக்கறையோடு இருந்தால் உறவு பலப்படும். சின்ன பாராட்டுகளோடு முத்தம் கொடுத்து கொள்வது, வெளியில் புறப்படும்போது ஆதரவாக அணைத்துவிட்டு கிளம்புவது உள்ளிட்ட ரொமாண்டிக் விஷயங்களை செய்யுங்கள். இதற்கெல்லாம் நேரமில்லை என சொல்லாதீர்கள். இந்த சின்ன விஷயங்களுக்கும் நீங்கள் நேரம் ஒதுக்குவதையே புத்தாண்டு தீர்மானமாக கொள்ளுங்கள். வாழ்க்கை வளமாகும்.
இதையும் படிங்க; உடலுறவில் ஈடுபடும் போது வலி ஏற்படுகிறதா? அலட்சியம் வேண்டாம்..!!