தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் முக்கிய பொருப்பை தமிழக காவல்துறை மேற்கொண்டு வருகிறது. காவல்துறை முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. காவல்துறை நலனுக்காக உங்கள் சொந்த இல்லம் திட்டத்த்தின் கீழ் போலீசார்களுக்கு குடியிருப்புகள், இரவுநேர பாதுகாப்பு பணிக்காக ரோந்து வாகனங்கள், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்ததுல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
85 இருசக்கர வாகனங்கள்
அண்மையில், சென்னை பெருநகர கவல்துறை ரோந்து பணிகளுக்காக 85 இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டது. அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய இந்த 85 இருசக்கர வாகனங்களை காவல்துறைக்கு அர்பணிக்கும் நிகழ்ச்சி சென்னை தலைமை செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கிவைத்தார். 40 பஜாஜ் பல்சர் வாகனங்கள் 45 டிவிஎஸ் ஜூபிட்டர் இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 85 இருசக்கர வாகனங்கள் காவல்துறைக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், 85 பைக்குகளை 74.8 கோடி ரூபாய்க்கு அரசு வாங்கியுள்ளதாக சமூக வலைத்தலங்களில் செய்திகள் வைரலாக பரவியது. ஆனால், இந்த தகவல் உண்மை இல்லை என்றும் ஜோடிக்கப்பட்ட ஒன்று என்றும் தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் Fact Check (உண்மை கண்டறியும்) குழு கூறியிருப்பதாவது, சென்னை காவல்துறைக்காக ரூ.74.8 கோடி செலவில் 85 அதிநவீன பைக்குகள் வாங்கியதாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்ளில் பரவி வருகிறது. அது, "ரூ.74.8 கோடி அல்ல. ரூ.74.08 லட்சம்" மட்டுமே என தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 24ம் தேதி சென்னை பெருநகர காவல்துறையின் பயன்பாட்டிற்காக மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்துடன் கூடிய 40 பஜாஜ் பல்சர் பைக் ரூ.39,38,500 செலவிலும் 45 TVS Jupiter இருசக்கர வாகனங்கள் ரூ.34,69,500 செலவிலும் என மொத்தம் 85 இருசக்கர வாகனங்களும் ரூ.74.08 லட்சம் செலவில் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு முதல்வர் அவர்களால் வழங்கப்பட்டது என தெரிவித்துள்ளது.