எதிர்ப்பையும் மீறி ஜெகன், சரண்யா இருவரும் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டனர். இதனால், சரண்யாவின் குடும்பத்தினர், ஜெகன் மீது கொலைவேறியில் இருந்துள்ளனர். இந்நிலையில், நேற்று மதியம் வேலைக்காக ஜெகன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, தர்மபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் டேம் ரோடு மேம்பாலம் அருகில் சர்வீஸ் ரோட்டில் வந்து கொண்டிருந்த போது அவரை வழிமறித்த சரண்யாவின் தந்தை சங்கர் மற்றும் உறவினர்கள் 2 பேர் கீழே தள்ளி கால்களை இருவர் பிடித்துக்கொள்ள ஜெகனை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.