சமீப காலமாக, நடிகை ஜெயசித்ரா மற்றும் அவரது மகன் அம்ரீஷ் ஆகிய இருவரும், பல்வேறு சமூக அக்கறை கொண்ட விஷயங்களில் தங்களை ஈடுபடுத்தி கொண்டு, பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்கள்.
அந்த வகையில், ஏற்கனவே கொரோனா முதல் அலையால் பாதிக்கப்பட்டு, ஊரடங்கு போட்ட போது... மற்ற தொழில் துறையினரை விட, சினிமா துறையை சேர்ந்தவர்கள் பெரிதும் பாதிக்க பட்டனர். பின்னர் கொரோனா கட்டுக்குள் வந்த பின், மெல்ல மெல்ல தளர்வுகள் அறிவிக்க பட்டபோது, சினிமா தொழிலாளர்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினர்.
ஆனால் இந்த இயல்பு நிலை 6 மாதங்களுக்கு மேல் நிலைக்க வில்லை. தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருவதால், மீண்டும் சினிமா பணிகள் முடங்கியுள்ளது. இதனால் பல சைடு ஆர்ட்டிஸ்ட் மற்றும் நாடக நடிகர்கள் அதிக அளவில் பாதிப்பை சந்தித்து வருகிறார்கள்.
இவர்களின் நிலையை கருத்தில் கொண்டு ஏற்கனவே, கோவை சரளா, தாடி பாலாஜி , பூச்சி முருகன் போன்ற பலர் உதவிய நிலையில், தற்போது நடிகை ஜெயசித்ரா சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு வீட்டிற்கு தேவையான அரிசி, பருப்பு, காய்கறிகள் போன்ற அடிப்படை பொருள்களை கொடுத்து உதவியுள்ளார்.
கலை உறவுகள் கவலை படாமல் தைரியமா சந்தோஷமாக இருங்கள்,விரைவில் நல்லது நடக்கும் , எல்லோருக்கும் ஒரு நல்ல தீர்வு விரைவில் நடக்கும், அனைத்து பிரச்சனைகளும் நடிகர் சங்கம் மூலம் தீர்க்கப்படும், நடிகர் சங்கம் உங்கள் தாய் வீடு என அனைவருக்கும் ஜெயசித்ரா தைரியமும் கூறியுள்ளார்.