Shivani : நாளுக்கு நாள் கூடும் கவர்ச்சி... ஷிவானியின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

First Published | Jun 26, 2022, 3:10 PM IST

Shivani : படங்களில் பிசியாக இருந்தாலும் சோசியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக இயங்கி வருகிறார் ஷிவானி. சமீப காலமாக இவர் பதிவிடும் புகைப்படங்களில் கிளாமர் சற்று தூக்கலாகவே உள்ளது. 

சீரியல் நடிகையாக சின்னத்திரையில் எண்ட்ரி கொடுத்த ஷிவானி, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நடிகை ஷிவானிக்கு கோலிவுட்டில் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவியத் தொடங்கின.

இதையும் படியுங்கள்... Nayanthara : ஹனிமூன் போட்டோஸை வெளியிட்ட விக்னேஷ் சிவன்... அதுல நயன்தாரா எடுத்த போட்டோ வேற லெவல்

இவர் நடிப்பில் இதுவரை விக்ரம் மற்றும் வீட்ல விசேஷம் ஆகிய படங்கள் வெளியாகின. இதில் விக்ரம் படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் 3 மனைவிகளுள் ஒருவராக நடித்திருந்தார் ஷிவானி. இப்படத்தில் அவர் ஓரிரு சீன்களில் மட்டுமே வந்தாலும், அதற்கு தியேட்டர்களில் விசில் பறந்தன. அந்த அளவுக்கு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார் ஷிவானி.

இதையும் படியுங்கள்... Karthi : கார்த்தி ஹீரோ - விஜய் சேதுபதி வில்லன்! மாஸ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் டைட்டில் லீக்கானது

Tap to resize

அடுத்ததாக வடிவேலு நடிப்பில் உருவாகும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் கவர்ச்சி வேடத்தில் நடித்துள்ளார் ஷிவானி. இதுதவிர பம்பர் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். ஜீவி பட நடிகர் வெற்றிக்கு ஜோடியாக இப்படத்தில் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி - பொன்ராம் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... AR Murugadoss : நோ சொன்ன விஜய்... ஓகே சொன்ன அஜித்! படு குஷியில் முருகதாஸ் - மீண்டும் இணையும் தீனா கூட்டணி!

இவ்வாறு படங்களில் பிசியாக இருந்தாலும் சோசியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக இயங்கி வருகிறார் ஷிவானி. சமீப காலமாக இவர் பதிவிடும் புகைப்படங்களில் கிளாமர் சற்று தூக்கலாகவே உள்ளது. அந்த வகையில், தற்போது கருப்பு நிற பனியன் ஒன்றை போட்டு படு கவர்ச்சியாக இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் படு வைரல் ஆகி வருகிறது.

Latest Videos

click me!