தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். சமீப காலமாக முன்னணி நடிகர்கள் படங்களில் நடிப்பதை விட, கதைக்கும் கதாநாயகிக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தான் அதிகம் தேர்வு செய்து நடிக்கிறார்.
தமிழில் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக 'இது என்ன மாயம்' படத்தில் அறிமுகமான கீர்த்திக்கு முதல் படம் தோல்வியை தழுவினாலும், இந்த படத்தை தொடர்ந்து வெளியான 'ரஜினி முருகன்' மற்றும் 'ரெமோ' ஆகிய படங்கள் கைகொடுத்தது.
தற்போது இவருடைய கைவசம், தெலுங்கில் மூன்று படங்கள் மட்டுமே உள்ளது. தமிழில் ஒரு பட வாய்ப்பு கூட இல்லை.
அதே போல் இவர், இடுப்பை வளைத்து.... நெளித்து... கவர்ச்சிக்கு குறை வைக்காமல் குத்தாட்டம் போட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி இவரது ரசிகர்களை வாயடைக்க செய்துள்ளது.