Published : Dec 23, 2019, 04:07 PM ISTUpdated : Dec 23, 2019, 04:12 PM IST
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா, தெலுங்கு திரையுலகின் முன்னணி நாயகன் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு பல நடிகைகள் சினிமாவில் இருந்து முற்றிலும் ஒதுங்கிவிடும் நிலையில், பெரிய இடத்து மாப்பிள்ளையை மணந்து கொண்ட சமந்தாவோ தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். மேலும் சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக இருக்கும் சமந்தா சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பதோடு, அவ்வப்போது தனது புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார். அளவான கவர்ச்சியில், திகட்டாத அழகுடன் சமந்தா வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடிக்கிறது. சமீபத்தில் புதுவித மார்டன் உடையில் கெத்தாக சமந்தா கொடுத்துள்ள போஸ்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.