Published : Jan 04, 2020, 01:46 PM ISTUpdated : Jan 04, 2020, 01:55 PM IST
ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபுதேவா, பிரபு, சரத்குமார், அர்ஜூன் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டவர் ரோஜா. தெலுங்கு திரையுலகிலும் சூப்பர் ஸ்டார்களுடன் நடித்த ரோஜா, ஒரு கட்டத்தில் அங்கேயே செட்டிலாகிவிட்டார். தற்போது ஆந்திர மக்களின் மனதை வென்ற ரோஜா, அங்கு எம்.எல்.ஏ.வாக உள்ளார். 47 வயதிலும் நச்சுன்னு இருக்கும் ரோஜா, துளிகூட கவர்ச்சி இல்லாமல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது.