Published : Nov 16, 2019, 04:55 PM ISTUpdated : Nov 16, 2019, 04:56 PM IST
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் 'பாய்ஸ்' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஜெனிலியா. அதன் பின்னர் சந்தோஷ் சுப்பிரமணியம், சச்சின், உத்தம புத்திரன், வேலாயுதம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்தி, தெலுங்கு, மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜெனிலியா. இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த காதல் தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இரண்டு குழந்தைகள் இருந்தாலும் நீங்க அம்மாவா என எல்லோரும் வியக்கும் வண்ணம் இன்னும் ஸ்லீம்மாகவே உள்ளார் ஜெனிலியா. தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெனிலியா பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் கிளிக்ஸ் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது.