80-பது மற்றும் 90-களில் முன்னணி நடிகையாக இருந்து, விஜயகாந்த், ரஜினி, கமல், சத்யராஜ் போன்ற பலருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை பானுபிரியா.
இசையமைப்பாளர் கங்கையமரன் இயக்கிய முதல் படமான 'எங்க ஊரு பாட்டுக்காரன்' படத்தின் மூலம் நிஷாந்தியை தமிழ் திரையுலகில் அறிமுகம் செய்தார்.
முதல் படம் வெற்றிபெற்ற அளவிற்கு இரண்டாவது படம் வெற்றிபெறவில்லை என்றாலும்... ரயிலுக்கு நேரமாச்சு, என் வழி தனிவழி போன்ற பல படங்களில் நடித்தார்.
முன்னணி நடிகையாக இருக்கும் போதே பாலிவுட் நடிகர் சித்தார்த் ரே இன்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் முழுமையாக திரையுலகை விட்டு விலகிய நிஷாந்தி தன்னுடைய மகன்களை கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தார்.
மேலும் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த துவங்கியுள்ள நிஷாந்தி, பல ஃபேஷன் ஷோ நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு அசத்தி வருகிறார்.