"காதல் கண் கட்டுதே" என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அதுல்யா ரவி. 'ஏமாலி', 'நாகேஷ் திரையரங்கம்' போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். தற்போது இவர் நடித்துள்ள 'நாடோடிகள் 2' மற்றும் 'அடுத்த சாட்டை' படங்கள் ரிலீஸ்க்கு தயாராக உள்ளன. தற்போது பிரபல இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள 'கேப்மாரி' படத்தில் அதுல்யா ரவி நடித்துள்ளார். இந்தப்படம் டிசம்பர் 6ம் தேதி திரைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரசிகர்களுக்கு ஆனந்த ட்ரீட் கொடுக்கும் விதமாக கறுப்பு நிற லாங் மேக்ஸியில் அதுல்யா ரவி கொடுத்துள்ள அசத்தல் போஸ்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.