இயக்குனர் பாரதிராஜா இயக்கிய 'அன்னக்கொடி' படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர், நடிகர் லக்ஷ்மன் நாராயணன். இந்த படத்தை தொடர்ந்து, இயக்குனர் சுசீந்திரன் நடிகர் விஷ்ணு விஷாலை வைத்து இயக்கிய 'ஜீவா' படத்தில் கிரிக்கெட் வீரராக நடித்து கலக்கி இருந்தார். இந்நிலையில் நடிகர் லக்ஷ்மனுக்கும், பழனிக்கு அருகே உள்ள நெய்க்காரப்பட்டியை சேர்த்த சம்யுக்தா என்கிற பெண்ணுக்கும் நவம்பர் மாதம் 10 ஆம் தேதி, மதுரை இடா சுடர் அரங்கில் திருமணம் நடந்துள்ளது. லக்ஷ்மன் திருமணம் செய்துள்ள பெண், கர்நாடகாவில் உள்ள பெல்காம் ஜவகர்லால் நேரு இன்ஸ்டிடியூட்டில் தற்போது எம்பிபிஎஸ் ஐந்தாம் ஆண்டு பயிற்சி எடுத்து வருகிறார். திருமணம் ஆகி சில நாட்கள் ஆன போதிலும் இவர்களுடைய திருமண புகைப்படங்கள் இப்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இதை பார்த்து ரசிகர்கள் பலர் இந்த தம்பதிகளுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.