இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் விக்ரம், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான எம்.எஸ்.தோனியை நேற்று திடீரென சந்தித்தார். அவர்கள் இருவரது சந்திப்பின் போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நடிகர் விக்ரம், தோனியின் தீவிர ரசிகராம், அதனால் அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக கூறப்படுகிறது. மற்றபடி இந்த சந்திப்பின் பின்னணியில் எந்த ஒரு விஷயமும் இல்லை என தெரிய வந்துள்ளது.