போட்டி போட்டு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தும் ரெண்டு கம்பெனி! எது பெஸ்டுனு பாக்கலாமா?

First Published Aug 29, 2023, 7:39 PM IST

பிரபல தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ள நிலையில், இரண்டு நிறுவனங்கள் மட்டும் அதிகமான சம்பளத்தை வழங்கி பணியாளர்களை குஷிபடுத்தியுள்ளன.

Tech Company Salary

பிரபல தொழில்நுட்ப நிறுவனங்கள் கடந்த இரண்டு ஆண்டுகிளல் பல சுற்றுகளாக பணிநீக்கச் நடவடிக்கையை மேற்கொண்டன. ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிறுவனங்களில் கூகுள், மெட்டா மற்றும் மைக்ரோசாப்ட் ஆகியவையும் அடங்கும். ஆனால் இந்த நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு எவ்வளவு ஊதியம் வழங்குகின்றன என்று எப்போதாவது யோசிச்சு பார்த்திருக்கீங்களா?

IT Companies

சமீபத்தில் வெளியாகியுள்ள ஐ.டி. ஊழியர்கள் நல அமைப்பு ஒன்றின் அறிக்கைப்படி, கூகிள் மற்றும் மெட்டா ஆகிய நிறுவனங்கள் மற்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களை விட தங்கள் எஞ்சினியரிங் ஊழியர்களுக்கு சிறந்த ஊதியம் வழங்குவதாகத் தெரியவந்துள்ளது.

Latest Videos


Big Tech Companies

பிளைண்ட் (Blind) என்ற தொழில்நுட்ப ஊழியர்களுக்கான மன்றம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. ஆப்பிள், அமேசான், மைக்ரோசாப்ட் ஆகியவற்றில் பணிபுரிபவர்களுடன் ஒப்பிடும்போது, கூகுள் மற்றும் மெட்டாவில் பணிபுரிபவர்கள் அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்று பிளைண்ட் மன்றம் கூறுகிறது.

Google and Meta

ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் தொடக்க நிலை பொறியாளர்களுக்கு சராசரியாக மிகவும் குறைந்தபட்சமான சம்பளத்தையே கொடுக்கின்றன. இதுவே அடுத்தடுத்த உயர்மட்ட ஊழியர்களுக்கு அதிக சம்பளம் வழங்குகிறது.

Blind Forum

ஜனவரி 2022 முதல் ஆகஸ்ட் 2023 வரை இந்த தொழில்நுட்ப நிறுவன ஊழியர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் பிளைண்ட் மன்றம் இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளது.

Amazon

அமேசானில் பதவி உயர்வு கிடைக்க அதிக நேரம் ஆகிறது என்றும், பிளைண்ட் அறிக்கை தெரிவிக்கிறது. பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் கூகுள் தான் மிகவும் சமநிலையான ஊதியங்களை வழங்கிவருகிறது எனவும் கூறப்படுகிறது. அதாவது, கீழ்மட்டத்தில் உள்ள ஒருவர் உயர் நிலையில் உள்ள ஒருவரை விட அதிக ஊதியம் பெறுவது அரிது.

Meta

பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற பிரபல சமூக வலைத்தளங்களை தன்வசம் வைத்துள்ள மெட்டா நிறுவனத்தில் உள்ள ஊழியர்கள் மிக வேகமாக பதவி உயர்வும், அதிக ஊதியமும் பெறுகின்றனர்.

Microsoft

மைக்ரோசாப்ட் நிறுவனம் ஊழியர்களை பல நிலைகளாகப் பிரித்துள்ளது. இதனால் அதிகமான பதவி உயர்வுகளை வழங்குகிறது. ஆனால், பலருக்கு சம்பளம் சக ஊழியர்களை விட குறைவாக உள்ளது.

click me!