இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில், பொறியியல் (கணினி, மின்னணு, இயந்திரவியல், சுரங்கம், இரசாயனம்), மனித வளம் மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கான பணியிடங்கள் உள்ளன. மேலாண்மை பயிற்சி (MT) பிரிவில் மாதம் ரூ.40,000 சம்பளமும், பிற பயிற்சி பிரிவுகளுக்கு ரூ.29,990 சம்பளமும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவுக்கும் தேவையான கல்வி தகுதி மற்றும் வயது வரம்பு ஆகியவை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.