குழந்தைகளுக்காக பணத்தை சேமிக்க மகளிர்களுக்கான அசத்தல் திட்டம்.! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு

Published : Aug 26, 2025, 10:09 AM IST

தமிழக அரசின் “தமிழ் மகள் சேமிப்பு திட்டம்” பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மாத சேமிப்பு மூலம் பெண்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்குகிறது, 

PREV
15
பெண்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்கள்

பெண்களின் முன்னேற்றத்திற்காக அரசு பல்வேறு திட்டங்ளை நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் மகளிர் உரிமை தொகை மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது. மேலும் கடன் உதவி திட்டம், மானிய உதவித்திட்டம் என பல திட்டங்கள் உள்ளது. 

இந்த நிலையில் பெண்கள் பணத்தை பாதுகாப்பாக சேமிக்கும் வகையில் தமிழக அரசு மகளிரின் பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்யும் நோக்கில் “தமிழ் மகள் சேமிப்பு திட்டம்” நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் பெண்களை சேமிப்பு பழக்கத்திற்கு ஊக்குவித்து, அவர்களின் நிதி நிலையை வலுப்படுத்துவது ஆகும்.

25
பணத்தை சேமிக்க வங்கி கணக்குகள்

அந்த வகையில் மகளிரின் பெயரில் தொடங்கப்படும் இந்த “தமிழ் மகள்” தொடர் வைப்புக் கணக்குகள் மூலம், மாதந்தோறும் குறைந்த தொகை சேமிக்கும்போது அது நீண்ட காலத்தில் பெரிய ஆதாரமாக மாறுகிறது. குறிப்பாக, குழந்தைகளின் கல்வி, குடும்ப அவசரத் தேவைகள் அல்லது சிறு தொழில் தொடக்கம் போன்ற வாழ்க்கைச் செயல்களில் பெண்களுக்கு நிதி பாதுகாப்பு கிடைக்கிறது. 

இதன் மூலம் குடும்ப பொருளாதாரத்தில் பெண்களின் பங்கு உறுதியானதாக மாறுகிறது. இந்த திட்டமானது கூட்டுறவு வங்கிகள் வழியாக இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இன்றைய தேதிவரை 31,928 “தமிழ் மகள்” தொடர் வைப்புக் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளது.

35
குழந்தைகளின் கல்வி தேவை

இந்தத் திட்டம் வெறும் சேமிப்பை மட்டுமே வலியுறுத்துவதில்லை. பெண்களுக்கு தனித்த நிதி ஆதாரம் உருவாக்கி, அவர்கள் தன்னம்பிக்கையுடன் சமூகத்தில் முன்னேறுவதற்கும் உதவுகிறது. சிறிய தொகை சேமிப்பும், ஒழுங்கான சேமிப்பு முறையும் குடும்பத்திற்கு பெரிய நிதி பலனை அளிக்கும் என்பதற்கான உறுதியான சான்றாகும். 

சேமிக்கும் பணம் எந்த பாதுகாத்திடும் வகையில் மாநில அரசு வங்கிகளுடன் இணைந்து செயல்படுவதால், இந்தத் திட்டத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படுகிறது. பெண்களின் வாழ்க்கையில் நிதி சுயநிலை ஏற்படுத்துவதோடு, எதிர்கால தலைமுறைக்கும் பொருளாதார பாதுகாப்பை வழங்குகிறது.

45
தமிழ் மகள் திட்டத்தின் பயன்கள்

பொருளாதார பாதுகாப்பு

சிறு தொகை சேமிப்பும் தொடர்ச்சியாக சேர்த்து வைப்பதன் மூலம், பெண்கள் எதிர்கால அவசர தேவைகளுக்கான நிதி ஆதாரத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள்.

குழந்தைகளின் எதிர்காலம் உறுதி

கல்விச்செலவு, திருமணச் செலவு அல்லது தொழில் தொடங்குதல் போன்ற எதிர்கால தேவைகளுக்கான நிதி வசதியை பெண்கள் எளிதாகப் பெற முடிகிறது.

சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பு

மாதந்தோறும் ஒழுங்காக பணத்தை சேமிக்கும் பழக்கம் உருவாகிறது. இது குடும்பத்தின் பொருளாதார நிலையை நிலைத்ததாக்குகிறது.

55
தமிழ் மகள் திட்டம்

பெண்களின் சுயநிறைவு

பெண்களுக்கு தனி வங்கி கணக்கு மற்றும் சேமிப்பு இருப்பதால், அவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரித்து, குடும்பத்திலும் சமூகத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

சிறு சேமிப்பை பெரிய பலனாக மாற்றுதல்

மாதந்தோறும் சிறிய தொகை வைப்பு, சில ஆண்டுகளுக்குப் பிறகு பெரிய தொகையாக கிடைக்கும். இது வாழ்க்கைச் செலவுகளுக்கு மிகப் பெரிய ஆதாரமாக அமையும்.

Read more Photos on
click me!

Recommended Stories