அவசரம்! 2,708 உதவிப் பேராசிரியர் வேலை: TRB-யின் திடீர் உத்தரவு - விண்ணப்பிக்கும் முன் இந்த சான்றிதழ்களை ரெடி பண்ணுங்க!

Published : Oct 27, 2025, 08:40 PM IST

TRB Assistant Professor அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 2,708 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

PREV
16
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (TRB) அறிவிப்பு என்ன?

ஆசிரியர் தேர்வு வாரியம் (Teachers Recruitment Board - TRB) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,708 உதவிப் பேராசிரியர் (Assistant Professor) பணியிடங்களுக்கு நேரடி நியமனம் தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

26
பணியனுபவச் சான்றிதழ்

ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள் மற்றும் விண்ணப்பிக்க உள்ளவர்கள் தங்களது பணியனுபவச் சான்றிதழ்களைப் (Experience Certificate) பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது வேலை தேடும் இளைஞர்களுக்குப் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.

36
எந்தெந்த Annexure சான்றிதழ்கள் பதிவேற்றப்பட வேண்டும்?

இந்த நியமனத்தில் விண்ணப்பதாரர்களின் பணியனுபவச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளதைக் கருத்தில் கொண்டு, கல்லூரிக் கல்வி ஆணையரின் தெளிவுரையின்படி, பிற்சேர்க்கை (Addendum) வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட Annexure-IV, Annexure-V மற்றும் Annexure-VI இல் கொடுக்கப்பட்ட பணியனுபவச் சான்றிதழ்களை, அவற்றிற்கான அறிவுறுத்தல்களின்படி (Instructions) உரிய அலுவலரிடம் கையொப்பம் பெற்று பதிவேற்றம் செய்ய வேண்டும். இது குறித்த விரிவான வழிகாட்டுதல்கள் TRB இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

46
பணியனுபவச் சான்று பதிவேற்றம் (Experience Certificate)

அறிவிக்கை எண். 04/2025 நாள். 16.10.2025இல், Annexure-IVஇல் உள்ள பணியனுபவச் சான்றிதழில், உரிய அலுவலர்களிடம் கையொப்பம் பெற்ற பின்பு, அச்சான்றிதழில் கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் (தி (ம)வ) அவர்களின் ஒப்புதல் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

விண்ணப்பதாரர்களின் கோரிக்கைகள் மற்றும் அவர்களின் நலன் கருதி, அறிவிக்கை எண். 04/2025 நாள். 16.10.2025இல் ஏற்கனவே Annexure-IV இல் கொடுக்கப்பட்டிருந்த "Certificate approved by Joint Director (P&D), Directorate of Collegiate Education, Chennai" என்ற வாசகம் நீக்கப்பட்டு, கீழ்க்கண்டவாறு புதிய Annexure-IV, Annexure-V மற்றும் Annexure-VI-இல் பணியனுபவச் சான்றிதழ்கள் மற்றும் அதற்கான உரிய அறிவுரைகள் (Instructions) வழங்கப்பட்டுள்ளன:

56
Annexure

• Annexure IV - அரசு / அரசு உதவிப்பெறும் / தனியார் கலை மற்றும் அறிவியல் / மருத்துவம் / பொறியியல் / கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரிபவர்களுக்கான பணியனுபவச் சான்றிதழ்

• Annexure-V - இந்தியப் பல்கலைக்கழகம் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் பணிபுரிபவர்களுக்கான பணியனுபவச் சான்றிதழ்

• Annexure-VI - வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கான பணியனுபவச் சான்றிதழ்கள்

எனவே, மேற்குறிப்பிடப்பட்டுள்ள Annexure-IV, Annexure-V மற்றும் Annexure-VI-இல் கொடுக்கப்பட்டுள்ள பணியனுபவச் சான்றிதழ்கள் மற்றும் அவை சார்ந்து தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகள் (Instructions) படி, விண்ணப்பதாரர்கள் உரிய அலுவலரிடம் கையொப்பம்/சான்றொப்பம் பெற்று பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

66
சான்றிதழ் பதிவேற்றத்தின் முக்கியத்துவம் என்ன?

உதவிப் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், மேற்குறிப்பிட்ட அனுபவச் சான்றிதழ்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் தங்களின் விண்ணப்பத்தை முழுமையாக்குகின்றனர். உரிய காலத்திற்குள், உரிய அதிகாரியிடம் கையொப்பம் பெற்ற சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்வது கட்டாயமாகும். இந்த அறிவுறுத்தல்கள், வெளிப்படைத்தன்மையையும், சரியான விண்ணப்பதாரரைத் தேர்ந்தெடுப்பதையும் உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன. எனவே, விண்ணப்பதாரர்கள் இந்தக் காலக்கெடுவை மனதிற்கொண்டு, உடனடியாகச் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யுமாறு TRB வலியுறுத்தியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories