TNSET ரிசல்ட் எப்போது? வெளியான முக்கிய தகவல்! 1 லட்சம் பேர் காத்திருப்பு!

Published : Sep 01, 2025, 08:39 AM IST

TNSET 2025 தேர்வு முடிவுகள் தாமதமாகி வருகிறது. அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி பற்றி TRB என்ன சொல்கிறது? முடிவுகள் ஏன் தாமதமாகிறது என்ற முக்கிய தகவல் இதோ.

PREV
15
TNSET 2024 தேர்வு முடிவுகள் எப்போது? காத்திருக்கும் ஒரு லட்சம் பேர்! டிஆர்பி வட்டாரங்களில் இருந்து கசிந்த முக்கிய தகவல்!

கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணியில் சேர, பல்கலைக்கழக மானியக் குழுவினால் நடத்தப்படும் தேசிய தகுதித் தேர்வு (UGC NET) அல்லது மாநில அளவில் நடத்தப்படும் செட் தேர்வில் (TN SET) தேர்ச்சி பெற வேண்டும். தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக செட் தேர்வை சுழற்சி முறையில் பல்கலைக்கழகங்கள் நடத்தி வந்த நிலையில், வரும் 3 ஆண்டுகளுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2024-ம் ஆண்டுக்கான செட் தேர்வுக்கான விண்ணப்பங்களை மனோன்மணியம் பல்கலைக்கழகம் பெற்ற நிலையில், தேர்வை டி.ஆர்.பி நடத்தியது. சுமார் 1 லட்சம் பேர் எழுதிய இந்தத் தேர்வு, மார்ச் 6 முதல் 9 வரை நடத்தப்பட்டது.

25
முடிவுகள் தாமதம் ஏன்?

இந்தத் தேர்வுகளுக்கான உத்தேச விடைக்குறிப்பு மார்ச் 13-ம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அது உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டது. மீண்டும் மார்ச் 20-ம் தேதி, ரெஸ்பான்ஸ் ஷீட் உடன் உத்தேச விடைக்குறிப்பு வெளியிடப்பட்டு, மார்ச் 27 வரை ஆட்சேபனைகள் பெறப்பட்டன. வழக்கமாக, ஒரு மாதத்தில் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஐந்து மாதங்கள் கடந்தும் இன்னும் முடிவுகள் வெளியாகவில்லை. இது தேர்வர்களிடையே பெரும் குழப்பத்தையும், காத்திருப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

35
டிஆர்பி என்ன சொல்கிறது?

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, "தமிழ்நாடு மாநில தகுதித் தேர்வு 2025-க்கான (TNSET) முடிவுகளை வெளியிடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது" என்று பதில் கிடைத்தது.

45
TNSET தேர்வு முடிவுகள்

இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத சில அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, "தமிழ் வழி பயின்றோருக்கான இடஒதுக்கீடு மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு முடிவுகளை வெளியிட டிஆர்பி திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த மாத இறுதிக்குள் அல்லது அக்டோபர் மாத முதல் வாரத்தில் TNSET தேர்வு முடிவுகள் வெளியிடப்படலாம்" என்று தெரிவித்தனர். இது அதிகாரப்பூர்வத் தகவல் இல்லை என்பதை கவனத்தில் கொள்ளவும்.

55
தேர்வர்கள் செய்ய வேண்டியது என்ன?

தற்போது, தேர்வர்கள் தொடர்ந்து டிஆர்பி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை கண்காணித்து வருவதே ஒரே வழி. முடிவுகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தாமதமாக வந்தாலும், தெளிவான இடஒதுக்கீடு அடிப்படையில் முடிவுகள் வெளியாகும் என்பதால், இந்த காத்திருப்பு ஒரு நல்ல முடிவைத் தரும் என நம்பலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories