தமிழக அரசு கொடுத்த ஹேப்பி நியூஸ்! ஊரக வளர்ச்சி துறையில் 375 காலி பணியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க! TNRD recruitment

Published : Sep 22, 2025, 06:00 AM IST

TNRD recruitment ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் எழுத்தர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர், இரவு காவலர் உட்பட 375 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். செப்டம்பர் 30, 2025-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

PREV
14
TNRD recruitment 375 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (TNRD) சார்பில், காலியாக உள்ள 375 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர் மற்றும் இரவு காவலர் போன்ற பதவிகளுக்குத் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆர்வமுள்ளவர்கள் செப்டம்பர் 30, 2025-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

24
பதவி வாரியான கல்வித்தகுதி மற்றும் காலியிடங்கள்

• பதிவறை எழுத்தர்: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ₹15,900 முதல் ₹58,500 வரை. காலியிடங்கள்: 33.

• அலுவலக உதவியாளர்: 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். மாத சம்பளம் ₹15,700 முதல் ₹58,100 வரை. காலியிடங்கள்: 189.

• ஓட்டுநர்: 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன், செல்லத்தக்க ஓட்டுநர் உரிமமும், 5 ஆண்டுகளுக்குக் குறையாத முன் அனுபவமும் அவசியம். மாத சம்பளம் ₹19,500 முதல் ₹62,000 வரை. காலியிடங்கள்: 68.

• இரவு காவலர்: தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருந்தால் போதும். மாத சம்பளம் ₹15,700 முதல் ₹58,100 வரை. காலியிடங்கள்: 85.

34
வயது வரம்பு மற்றும் விண்ணப்ப கட்டணம்

இந்த வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்க பொதுப்பிரிவினர் 18 முதல் 32 வயதுக்குள்ளும், பிற்படுத்தப்பட்டோர்/மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 18 முதல் 34 வயதுக்குள்ளும், ஆதிதிராவிடர்/பட்டியல் பழங்குடியினர் 18 முதல் 37 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ஆதிதிராவிடர்/பட்டியல் பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ₹50 ஆகும். மற்ற பிரிவினருக்கு ₹100 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

44
விண்ணப்பிக்கும் முறை மற்றும் முக்கிய தேதிகள்

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் www.tnrd.tn.gov.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய ஆரம்ப தேதி செப்டம்பர் 01, 2025 மற்றும் கடைசி தேதி செப்டம்பர் 30, 2025 ஆகும். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து, தகுதிகளை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories