இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E/B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். ECE, ETC, E&I, Electronics, EEE, Electrical, CSE, IT, Mechanical போன்ற துறைகளில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது 21 முதல் 30 வரை இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி, SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். இது, பல இளைஞர்களுக்கு ஒரு கூடுதல் வாய்ப்பை வழங்குகிறது.