தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் இணைந்து மாபெரும் வேலைவாய்ப்பு முகாமினை நடத்தி வருகின்றன. அந்த வகையில் நாளைய தினம் சென்னை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமைந்துள்ள தனியார் நிறுவனங்களை ஒருங்கிணைத்து இந்த வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தங்கள் கல்வி தகுதிக்கு ஏற்ப தங்கள் இருப்பிடத்திற்கு அருகிலேயே வேலை வாய்ப்பைப் பெறும் நிலை உருவாகி வருகிறது.
Job Fair
தலைநகர் சென்னையில் நாளைய தினம் நந்தனம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமில் 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இந்த முகாம் காலை 8 மணியளவில் தொடங்கி பிற்பகல் 3 மணிவரை நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த முகாமில் சுமார் 20000 இளைஞர்களுக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப பணி வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த முகாமில் பங்கேற்ற விரும்பும் இளைஞர்கள் https://docs.google.com/forms/d/e/1FAIpQLScpLaGvQqcvsk0NNOwB50EonRg9I8jaIiNTFwt-AuQWv297wQ/viewform என்ற இணையதளத்தில் பதிவு செய்த பின்னர் முகாமில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி விவேகானந்தா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறும் வேலை வாய்ப்பு முகாம் காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 3 மணி வரை நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாமில் 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ள நிலையில், இந்த மூகாம் மூலம் சுமார் 10000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Job vacancy
முகாமில் பங்கேற்க விரும்பும் நபர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து தங்கள் வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். மேலும் முகாமில் பங்கேற்கும் இளைஞர்கள் தங்கள் கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுடன் வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.