டீச்சர்ஸ் கவனிங்க! உங்க வயசு, எக்ஸ்பீரியன்ஸ் விவரங்களை சேகரிக்கும் அரசு! பின்னணியில் முக்கிய காரணம்!

Published : Jan 09, 2026, 07:42 PM IST

ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெறாத தமிழக ஆசிரியர்களின் விவரங்களை தொடக்கக் கல்வித் துறை சேகரித்து வருகிறது. இந்தத் தரவுகளின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு சாதகமான முடிவு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

PREV
15
ஆசிரியர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெறாமல் பணியாற்றி வரும் ஆசிரியர்களின் முழுமையான விவரங்களைத் திரட்டும் பணியில் தொடக்கக் கல்வித் துறை இறங்கியுள்ளது.

25
பின்னணி என்ன?

ஆசிரியர் பணியில் சேருவதற்கும், பணியில் நீடிப்பதற்கும் 'டெட்' தேர்வு கட்டாயம் என்று மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிமுறை வைத்துள்ளன. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆசிரியர்கள் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று தீர்ப்பளித்தது.

இருப்பினும், ஓய்வு பெற இன்னும் 5 ஆண்டுகள் மட்டுமே உள்ள ஆசிரியர்கள் மட்டும் தேர்ச்சி பெறாமல் பணியில் தொடரலாம் என்றும், 5 ஆண்டுகளுக்கு மேல் பணிக்காலம் உள்ளவர்கள் தேர்ச்சி பெறாவிட்டால் வேலையை விட்டு விலக வேண்டியிருக்கும் அல்லது கட்டாய ஓய்வு அளிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

35
மத்திய அரசின் தலையீடு

இந்தத் தீர்ப்பால் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் வெளியேற்றப்பட்டால் கல்வித் துறையில் பெரிய வெற்றிடம் ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது. மேலும், இது ஆசிரியர்களுக்கு மனரீதியான பாதிப்பையும், பொருளாதார நெருக்கடியையும் உருவாக்கும் என்ற கோரிக்கைகள் மத்திய கல்வி அமைச்சகத்திடம் முன்வைக்கப்பட்டன.

இதனையடுத்து, மத்திய கல்வி அமைச்சகம் தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது.

45
தமிழக அரசின் பதில்

தமிழக அரசின் பதில் கடிதத்தில், தமிழகத்தில் இந்தத் தீர்ப்பால் பாதிக்கப்படும் ஆசிரியர்களின் துல்லியமான எண்ணிக்கையை கணக்கிட வேண்டும், ஆசிரியர்களின் வயது, அவர்கள் பணியில் சேர்ந்த காலம் ஆகியவற்றை முறையான படிவத்தில் சேகரிக்க வேண்டும், பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்குத் தேவையான சட்டரீதியான பாதுகாப்பு மற்றும் நிவாரண வழிகள் குறித்து ஆலோசிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

55
'டெட்' தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள்

இதன் தொடர்ச்சியாக, தற்போது தமிழகம் முழுவதும் 'டெட்' தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்தத் தரவுகள் விரைவில் மத்திய கல்வி அமைச்சகத்திற்கு அனுப்பப்பட உள்ளன. இதன் மூலம் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஏதேனும் சாதகமான முடிவுகள் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories