தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு அறிவிப்பு! ரூ.10,000 உதவித்தொகை பெற உடனே விண்ணப்பியுங்கள். தேர்வு தேதி மற்றும் முழு விவரம் உள்ளே.
28
முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தனித்திறனை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம்தோறும் உதவித்தொகை வழங்கும் 'முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு' (TN Chief Minister Talent Search Exam) குறித்த முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
38
மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வீதம் உதவித்தொகை வழங்குவதற்கான இந்தத் தேர்வுக்கு, வியாழக்கிழமை (டிசம்பர் 18) முதல் விண்ணப்பிக்கலாம் எனப் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மாணவர்களின் பொருளாதாரச் சுமையைக் குறைத்து, உயர்கல்வி நோக்கி அவர்களைப் பயணிக்க வைப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வித் திறனை கண்டறியவும், அவர்களை மென்மேலும் ஊக்குவிக்கவும் 2023-2024 ஆம் கல்வியாண்டு முதல் இந்தத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு கல்வியாண்டிற்கான (2025-2026) முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு வரும் ஜனவரி மாதம் 31-ம் தேதி நடைபெறவுள்ளது.
58
ரூ.10,000 உதவித்தொகை யாருக்கு?
மாநில பாடத் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் தற்போது பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மட்டுமே இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். இந்தத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களில், இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 500 மாணவர்கள் மற்றும் 500 மாணவிகள் என மொத்தம் 1,000 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களுக்கு ஒரு கல்வியாண்டிற்கு மாதம் 1,000 ரூபாய் வீதம், 10 மாதங்களுக்கு மொத்தம் ரூ.10,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
68
தேர்வு முறை மற்றும் பாடத்திட்டம்
இத்தேர்வு இரண்டு தாள்களாக நடைபெறும். தமிழக அரசின் 9 மற்றும் 10-ம் வகுப்பு கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப்புத்தகங்களில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் வினாக்கள் அமையும்.
• ஒவ்வொரு தாளிலும் தலா 60 கேள்விகள் இடம்பெறும்.
• முதல் தாள்: கணிதப் பாடத்தில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.
• இரண்டாம் தாள்: அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து வினாக்கள் இடம்பெறும்.
78
விண்ணப்பிப்பது எப்படி?
தேர்வின் முதல் தாள் காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், இரண்டாம் தாள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் நடைபெறும்.
• மாணவர்கள் இதற்கான விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற அரசு இணையதளத்தில் டிசம்பர் 18 முதல் டிசம்பர் 26 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
88
விண்ணப்பிப்பது எப்படி?
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணமாக ரூ.50 செலுத்தி, தங்கள் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலக்கெடு முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.