தென்காசியில் அரசு வேலை! 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு கிராம உதவியாளர் பணி - ரூ. 35,100 வரை சம்பளம்!

Published : Jul 14, 2025, 11:05 PM IST

தென்காசி மாவட்ட வருவாய் துறையில் கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு. 33 காலியிடங்கள், 10ம் வகுப்பு தகுதி. மாதம் ரூ. 35,100 வரை சம்பளம். ஆகஸ்ட் 12, 2025க்குள் விண்ணப்பிக்கவும்.

PREV
17
தென்காசி மாவட்ட வருவாய் துறையில் கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு!

தென்காசி மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு! மொத்தம் 33 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நீங்கள் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும், தமிழ் மொழியைப் பிழையின்றி எழுதவும் படிக்கவும் தெரிந்தவராகவும் இருந்தால், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

27
சம்பளம் மற்றும் தாலுகா வாரியான காலியிடங்கள்!

கிராம உதவியாளர் பணிக்கு மாதம் ரூ. 11,100 முதல் ரூ. 35,100 வரை சம்பளம் வழங்கப்படும். தாலுகா வாரியாக உள்ள காலியிடங்களின் விவரங்கள்:

தென்காசி – 02

ஆலங்குளம் – 05

சிவகிரி – 03

கடையநல்லூர் – 04

திருவேங்கடம் – 01

செங்கோட்டை – 03

உங்கள் வட்டத்தில் உள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பித்து பயனடையலாம்.

37
கல்வி மற்றும் இதர தகுதிகள்: உங்கள் கிராமத்திற்கே முன்னுரிமை!

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர் அந்த வட்டத்தைச் சேர்ந்தவராகவும், அதே வட்டத்தில் நிரந்தரமாக வசிப்பவராகவும் இருக்க வேண்டும். தமிழில் பிழையின்றி எழுதவும், படிக்கவும் தெரிந்திருப்பது அவசியம். மிக முக்கியமாக, காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட கிராமத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு, அந்தக் கிராம பணியிடத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

47
வயது வரம்பு மற்றும் தேர்வு செய்யும் முறை!

வயது வரம்பு பிரிவுகளின்படி மாறுபடுகிறது:

BC, BC (M), MBC/DNC, SC, SC(A), ST: 21 வயது முதல் 37 வயது வரை.

மாற்றுத்திறனாளிகள்: 21 வயது முதல் 42 வயது வரை.

இதர வகுப்பினர்: 21 வயது முதல் 32 வயது வரை.

தகுதியான நபர்கள் மிதிவண்டி/இருசக்கர வாகனம் ஓட்டும் திறன், வாசித்தல் மற்றும் எழுதும் திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டும், நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலமும் தேர்வு செய்யப்படுவார்கள்.

57
முக்கிய தேதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை!

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: ஜூலை 14, 2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 12, 2025

67
விண்ணப்பப் படிவம்

விண்ணப்பப் படிவங்களை [https://krishnagiri.nic.in/](https://krishnagiri.nic.in/) என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து, சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம். 

77
விண்ணப்பிப்பதற்கு முன்

விண்ணப்பிப்பதற்கு முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளும் உங்களிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் உடனே விண்ணப்பித்து அரசுப் பணியைப் பெறுங்கள்!

Read more Photos on
click me!

Recommended Stories