இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், Diploma, Degree, B.E. / B.Tech, GNM/ B.Sc Nursing, DMLT, B.Pharm OR D.Pharm, M.D. / D.N.B/ M.Ch./ M.D.S., Post Graduate, Master Degree போன்ற கல்வித் தகுதிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி, SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PwBD (Gen/EWS) பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், PwBD (SC/ST) பிரிவினருக்கு 15 ஆண்டுகளும், PwBD (OBC) பிரிவினருக்கு 13 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு அளிக்கப்படும்.