இந்தியாவில் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். தமிழ்நாட்டிலும் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்களது வேலையை விட்டு மாநில அரசு மற்றும் மத்திய அரசுத் தேர்வுகளுக்கு படித்து வருகின்றனர். இந்நிலையில், அரசு வேலை பெற வேண்டும் என்ற கனவில் இருப்பவர்களுக்காக பொதுத்துறை வங்கிகள் மிகப்பெரிய காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
24
வங்கிகளில் 10,277 காலி பணியிடங்கள்
பொதுத்துறை வங்கிகளில் நிலவும் காலிப்பணியிடங்களை ஐ.பி.பி.எஸ் எனப்படும் தேர்வாணையம் நிரப்பி வருகிறது. அந்த வகையில் தான் இப்போது 10,277 கிளர்க் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எஸ்.பி.ஐ வங்கியைத் தவிர்த்து இந்தியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உட்பட 11 பொதுத்துறை வங்கிகளில் இந்த காலிபணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ்நாட்டில் 894, புதுச்சேரியில் 19, உத்தரப் பிரதேசத்தில் 1315, மகாராஷ்டிராவில் 1117, கர்நாடகாவில் 1170, குஜராத்தில் 753 காலியிடங்கள் இருக்கின்றன.
34
விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன?
இந்த வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தேதி கடந்த 1ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 21 ஆகும். இந்த பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு (Preliminary Exam)அக்டோபர் 4, 5 மற்றும் 11ம் தேதிகளில் நடைபெறும். முதன்மைத் தேர்வு (Main Exam)நவம்பர் 29 அன்று நடைபெறும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் முடித்தவர்கள் வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
வயது வரம்பு என்ன?
ஆகஸ்ட் 1, 2025 தேதியின்படி 20 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு (SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள்). விண்ணப்பிக்கும் மாநிலத்தின் பிராந்திய மொழியில் புலமை பெற்றிருப்பது மிகவும் முக்கியமாகும்.
இந்த பணியிடங்களுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு ஆன்லைன் மூலம் நடைபெறும். இதில் தகுதி பெறுபவர்கள் மட்டுமே முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். முதன்மை எழுத்துத் தேர்வு 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இந்தத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே இறுதித் தேர்வுக்குக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
எப்படி விண்ணப்பிப்பது?
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் IBPS-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான ibps.in-க்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு ரூ. 850 மற்றும் SC/ST/PwBD பிரிவினருக்கு ரூ. 175 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.