கால்நடை மருத்துவராக ஆசையா? TANUVAS இளங்கலை மாணவர் சேர்க்கை 2025-26 ஆரம்பம்: முழுவிவரம்...

Published : May 28, 2025, 07:00 AM IST

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான TANUVAS 2025-26 மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியீடு. மே 26, 2025 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

PREV
16
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான பொன்னான வாய்ப்பு!

தமிழக மாணவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு! தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS), 2025-2026 ஆம் கல்வியாண்டுக்கான இளங்கலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளதுகால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை அறிவியல் துறையில் ஆர்வமுள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது ஒரு மிகச்சிறந்த கல்வி வாய்ப்பு.

26
BVSc & AH: கால்நடை மருத்துவத்தின் நுழைவாயில்

BVSc & AH (Bachelor of Veterinary Science and Animal Husbandry) படிப்பு 5.5 ஆண்டுகள் கால அளவைக் கொண்டது. இதில் 4.5 ஆண்டுகள் படிப்பு மற்றும் 1 ஆண்டு கட்டாய இன்டர்ன்ஷிப் அடங்கும்மொத்தம் 660 இடங்கள் உள்ளனசென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம், தேனி, உடுமலைப்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் இந்த இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளனஇந்த இடங்கள் அரசு மற்றும் இந்திய கால்நடை மருத்துவ கவுன்சிலின் (VCI) ஒப்புதலுக்கு உட்பட்டதுமொத்த இடங்களில் 15% இடங்கள் இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு ஒதுக்கப்படும்.

36
BTech படிப்புகள்: உணவு, கோழி மற்றும் பால்வளத் தொழில்நுட்பம்

TANUVAS மூன்று வகையான BTech படிப்புகளையும் வழங்குகிறது. BTech (உணவுத் தொழில்நுட்பம்), BTech (கோழித் தொழில்நுட்பம்) மற்றும் BTech (பால்வளத் தொழில்நுட்பம்) ஆகிய நான்கு ஆண்டு கால படிப்புகள் இவைஉணவுத் தொழில்நுட்பத்திற்கு 40 இடங்களும், கோழித் தொழில்நுட்பத்திற்கு 40 இடங்களும், பால்வளத் தொழில்நுட்பத்திற்கு 20 இடங்களும் உள்ளன. 

46
சென்னை மற்றும் ஓசூர்

சென்னை மற்றும் ஓசூரில் உள்ள கல்லூரிகளில் இந்த படிப்புகள் வழங்கப்படுகின்றனஇந்த BTech படிப்புகளுக்கான இடங்களும் ICAR மற்றும் அரசு ஒப்புதலுக்கு உட்பட்டதுமேலும், BTech (உணவுத் தொழில்நுட்பம்) மற்றும் (பால்வளத் தொழில்நுட்பம்) ஆகிய படிப்புகளுக்கான மொத்த இடங்களில் 15% இடங்கள் ICAR மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு ஒதுக்கப்படும்.

56
விண்ணப்பிப்பது எப்படி? முக்கியத் தேதிகள்!

மாணவர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பங்கள் 26.05.2025 அன்று காலை 10.00 மணி முதல் 20.06.2025 மாலை 5.00 மணி வரை [https://adm.tanuvas.ac.in](https://adm.tanuvas.ac.in) என்ற இணையதளத்தில் கிடைக்கும். விண்ணப்பதாரர்கள் தகுதிக்கான நிபந்தனைகள், தேர்வு முறை மற்றும் பிற விவரங்களை இணையதளத்தில் காணலாம். 

66
தேவையான ஆவணங்கள்

தேவையான ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றி, கடைசி தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். நேரடி விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. NRI, NRI ஆதரவு பெற்ற மற்றும் வெளிநாட்டு மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த விவரங்களுக்கும் இதே இணையதளத்தைப் பார்வையிடலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories