தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலை! டிகிரி இருந்தால் போதும்! சூப்பர் அறிவிப்பு வெளியானது!
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்த வங்கிக்கு தற்போது இந்தியா முழுவதும் 572 முழு அளவிலான கிளைகள் உள்ளன. 12 பிராந்திய அலுவலகங்கள், 13 விரிவாக்க கவுண்டர்கள், 1094 ஏடிஎம் மையங்களை கொண்டுள்ளது. இந்த வங்கி இந்தியா முழுவதும் தனது கிளைகளை விரிவுபடுத்தி வருகிறது.
26
Tamilnad Mercantile Bank
இந்நிலையில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அவ்வப்போது வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு கல்வித் தகுதி மற்றும் சம்பளம் என்ன என்பதை பார்ப்போம்.
36
Tamilnad Mercantile Bank
காலிப்பணியிடங்கள் விவரம்:
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் விவசாய அதிகாரி பணியிடங்கள் (Agricultural Officer – Scale I)
வயது வரம்பு:
30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
46
Tamil Nadu Mercantile Bank Job
கல்வித் தகுதி:
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் விவசாய அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க விவசாயம் சார்ந்த படிப்புகளில் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு, கால்நடை அறிவியல், பால் அறிவியல், வேளாண் பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக வங்கி, நிதி நிறுவனம் உள்ளிட்டவற்றில் 3 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் தேவை.
56
Bank jobs
சம்பளம்:
இப்பணியிடங்களுக்கான சம்பளம் குறித்த விவரங்கள் அறிவிப்பில் இடம்பெறவில்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் விரும்புகிறவர்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேரடியாகவோ அல்லது வீடியோ கலந்துரையாடல் மூலமாகவோ நேர்காணல் நடைபெறும்.
66
TMB Bank
விண்ணப்பிக்கும் முறை:
விவசாய அதிகாரி காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.tmbnet.in/tmb_careers/ என்ற இணையதளத்தில் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. ஆன்லைன் வழியாக இலவசமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் நபர்கள் சரியான இமெயில் மற்றும் செல்போன் எண்களை கொடுக்க வேண்டும்.