வெளிநாட்டில் பணிபுரிய ஆசையா? இதுதான் சரியான டைம்! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

First Published | Jan 24, 2025, 5:09 PM IST

ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு பணிகளுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.78,000 வரை.

வெளிநாடுகளில் உள்ள வேலைவாய்ப்புகள் தொடர்பான தகவல்களையும்  தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அவ்வப்போது அறிவித்து வருகிறது. வெளிநாடுகளில் வேலை என கூறி தொடர்ந்து பல லட்சங்களில் பணத்தை பெற்று மோசடி சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் தமிழக அரசே வெளிநாடுகளில் உள்ள வேலைவய்ப்பு ஊதியம் தொடர்பான சரியான விவரங்களை வெளியிட்டு வருகிறது. 

இதுதொடர்பாக அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 3 வருட பணி அனுபவத்துடன் 44 வயதுக்கு உட்பட்ட Welder பணிக்கு ரூ. 40,000 முதல் ரூ.78,000 வரை, Piping Fabricator ரூ. 40,000 முதல் ரூ. 51,000 வரை, Piping Fitter ரூ. 36,000 முதல் ரூ. 42,000 வரை, Structure Fabricator ரூ. 42,000 முதல் ரூ. 51,000 வரை, Structure Fitter ரூ. 36,000 முதல் ரூ. 42,000 வரை, Millwright Fitter ரூ. 42,000 முதல் ரூ. 51,000 வரை Grinder/Gas cutter ரூ. 30,000 முதல் ரூ. 32,000 வரை மற்றும் Piping Foreman ரூ. 53,000 முதல் ரூ. 60,000 வரை மாத ஊதியமாக வழங்கப்படும். மேலும் உணவு மற்றும் இருப்பிடம், வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.


மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு செல்ல விருப்பமுள்ள ஆண் பணியாளர்கள் ovemclnm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுய விவர விண்ணப்பப்படிவம், கல்வி, பணி அனுபவச் சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் (Passport) நகலினை ஜனவரி 30ம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டள்ளது. 

மேற்குறிப்பிட்ட பணிக்கு செல்பவர்கள் விசா கிடைத்தப்பின்னர் இந்நிறுவனத்திற்கு சேவைக்கட்டணமாக ரூ. 35,400 மட்டும் செலுத்தினால் போதும். இப்பணிகளுக்கான நேர்காணல் ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 01 அன்று காலை 9.00 மணி முதல் நடைபெற உள்ளது. எனவே, விருப்பம் உள்ளவர்கள் (Resume, Passport Original & Copy) Aadhar Copy & Photo ஆகியவற்றுடன் ஒருங்கினைந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகம்  ஆலந்தூர் ரோடு, திரு.வி.க. தொழிற்பேட்டை கிண்டிக்கு வர வேண்டும். 

கூடுதல் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவன வலைதளம்: www.omcmanpower.tn.gov.in தொலைபேசி எண் 044-22502267 மற்றும் whatsapp எண் 9566239685 வாயிலாக அறிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos

click me!