தமிழக அரசு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (TAHDCO) மற்றும் CSRL இணைந்து, 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு 2026 ஆம் ஆண்டுக்கான JEE மெயின் மற்றும் அட்வான்ஸ்டு நுழைவுத் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்குகிறது. IIT பேராசிரியர்களால் வழங்கப்படும் இந்த அரிய வாய்ப்பு, IIT கனவுடன் இருக்கும் மாணவர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு.
பயிற்சியின் சிறப்பு அம்சங்கள்:
- IIT பேராசிரியர்களால் பயிற்சி.
- இலவச உணவு மற்றும் தங்குமிடம்.
- JEE மெயின் மற்றும் அட்வான்ஸ்டு தேர்வுகளுக்கு முழுமையான பயிற்சி.
பதிவு செய்வது எப்படி?
நுழைவுத் தேர்வுக்கான பதிவிற்கு, விளம்பரத்தில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும் அல்லது www.tahdco.com என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.
மேலும் தகவலுக்கு:
+91 9789001601 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் அல்லது www.tahdco.com என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.
IIT Madras
TAHDCO ஏன் இந்த முயற்சியை மேற்கொள்கிறது?
சமூகத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை வழங்குவதே TAHDC-யின் முக்கிய நோக்கம். IIT போன்ற உயர்தர கல்வி நிறுவனங்களில் சேர பொருளாதார ரீதியாக சவால்களை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு இந்த இலவச பயிற்சி ஒரு வரப்பிரசாதமாக அமையும். இது மாணவர்களின் எதிர்காலத்தை பிரகாசமாக்க ஒரு சிறந்த வாய்ப்பு.
இதையும் படிங்க: ஃபேஷன் கனவா? தமிழ்நாட்டில் டாப் 10! - சிறந்த கல்லூரிகள்
மாணவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு!
IIT கனவுடன் இருக்கும் மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள். IIT பேராசிரியர்களின் வழிகாட்டுதலில், உங்கள் கனவை நனவாக்குங்கள். TAHDC-யின் இந்த முயற்சியை பயன்படுத்தி, உங்கள் எதிர்காலத்தை வளமாக்குங்கள்.
முக்கிய குறிப்பு:
விண்ணப்பங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். எனவே, தகுதியான மாணவர்கள் விரைவில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதையும் படிங்க: இந்தியாவின் டாப் 10 பல்கலைக்கழகங்கள்: பெஸ்ட் அரசு யூனிவர்சிட்டி!