SSC GD Constable Recruitment 2025: வெறும் 10-வது பாஸ் போதும்... ராணுவத்தில் சேரணுமா? வந்தாச்சு மெகா வாய்ப்பு!

Published : Dec 01, 2025, 09:39 PM IST

SSC GD Constable Recruitment 2025 மத்திய அரசின் BSF, CISF, CRPF படைகளில் 25,487 கான்ஸ்டபிள் பணியிடங்கள் அறிவிப்பு. கல்வித் தகுதி 10-ம் வகுப்பு. சம்பளம் ரூ.69,100 வரை. விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 31. முழு விவரம் உள்ளே.

PREV
17
SSC GD Constable Recruitment 2025 10-வது படித்திருந்தால் போதும்... மத்திய அரசுப் படைகளில் 25,487 காலியிடங்கள்! முழு விவரம் இதோ!

மத்திய ஆயுதக் காவல் படைகளில் (CAPFs) சேரத் துடிக்கும் இளைஞர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி! ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் (SSC) கான்ஸ்டபிள் ஜிடி (General Duty) பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

27
மத்திய பணியாளர் தேர்வாணையம்

நாட்டின் பாதுகாப்பில் பங்காற்ற விரும்புபவரா நீங்கள்? கையில் 10-ம் வகுப்பு சான்றிதழ் இருக்கிறதா? இதோ உங்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது 25,000-க்கும் மேற்பட்ட மத்திய அரசு வேலைவாய்ப்புகள். SSC எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம், 2026-ஆம் ஆண்டிற்கான கான்ஸ்டபிள் ஜிடி தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் செயல்முறையும் தொடங்கிவிட்டது.

37
எந்த படையில் எவ்வளவு காலியிடங்கள்?

மொத்தம் 25,487 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ஆண்களுக்கு 23,467 இடங்களும், பெண்களுக்கு 2,020 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக CISF படையில் மிக அதிகபட்சமாக 14,000-க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.

47
காலியிடங்கள்

• CISF (மத்திய தொழில் பாதுகாப்புப் படை): 14,595 இடங்கள் (அதிகபட்சம்)

• CRPF (மத்திய ரிசர்வ் போலீஸ் படை): 5,490 இடங்கள்

• BSF (எல்லைப் பாதுகாப்புப் படை): 2,616 இடங்கள்

• SSB (சசாஸ்த்ரா சீமா பால்): 1,764 இடங்கள்

• Assam Rifles: 1,706 இடங்கள்

• ITBP: 1,293 இடங்கள்

• SSF: 23 இடங்கள்

57
கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு

• கல்வி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10-ம் வகுப்பு (Matriculation) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (ஜனவரி 1, 2026 தேதியின்படி).

• வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 18 முதல் 23 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். (அதாவது 02-01-2003 முதல் 01-01-2008 வரை பிறந்திருக்க வேண்டும்). அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

67
சம்பளம் எவ்வளவு?

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Pay Level-3 அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும். இதன்படி மாதச் சம்பளம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை கிடைக்கும். இதுதவிர மத்திய அரசின் இதர சலுகைகளும் உண்டு.

தேர்வு முறை எப்படி? (Selection Process)

1. கணினி வழித் தேர்வு (Computer Based Exam - CBE)

2. உடற்தகுதித் தேர்வு (PET & PST)

3. மருத்துவப் பரிசோதனை (Medical Exam)

4. சான்றிதழ் சரிபார்ப்பு (Document Verification)

முக்கிய குறிப்பு: கணினி வழித் தேர்வானது ஆங்கிலம் மற்றும் இந்தியைத் தவிர, தமிழ் உட்பட 13 பிராந்திய மொழிகளிலும் நடைபெறும் என்பது தமிழக மாணவர்களுக்குக் கூடுதல் வாய்ப்பாகும்.

77
விண்ணப்பிப்பது எப்படி?

• விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 31, 2025 (இரவு 11 மணி வரை).

• அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.gov.in ல் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

• புதிய இணையதளத்தில் 'One Time Registration' (OTR) செய்வது கட்டாயம். பழைய இணையதள கணக்கு செல்லாது.

• தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: ஜனவரி 1, 2026.

• தேர்வுகள் பிப்ரவரி முதல் ஏப்ரல் 2026 வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடைசி நேரத்தில் சர்வர் முடங்க வாய்ப்புள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் டிசம்பர் 31 வரை காத்திருக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories