கொத்து கொத்தாக வேலைவாய்ப்பு.! இன்டர்வியூக்கு வாங்க அப்பாயின்மென்ட் ஆர்டர் வாங்குங்க- அசத்தல் அறிவிப்பு

Published : Aug 22, 2025, 07:35 AM IST

தமிழக அரசு பல்வேறு மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. கிருஷ்ணகிரி, மதுரை மற்றும் கோயம்புத்தூரில் நிறுவனங்கள் பங்கேற்று பல்வேறு கல்வித்தகுதிகளுடன் கூடிய வேலைநாடுநர்களைத் தேர்வு செய்யவுள்ளன.

PREV
14
வேலை இல்லையா.? சூப்பர் சான்ஸ்

வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கிடும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சென்னையில் மட்டும் வேலை வாய்ப்பை உருவாக்காமல் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பை வழங்கிடும் வகையில் தொழில் நிறுவனங்கள் தொடங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

 அந்த வகையில் வெளிநாட்டு தொழில் நிறுவனங்களை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொழில் தொடங்க ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் தனியார் வேலை வாய்ப்பு முகாமில் பல ஆயிரம் பேருக்கு வேலை வழங்கிடும் வகையில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

24
கிருஷ்ணகிரியில் வேலைவாய்ப்பு முகாம்

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (22,08.2025 வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் 1 மணி வரை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இடம்: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்

கல்வித்தகுதிகள்

8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் +2 தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு படித்தவர்கள், ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்கள் என அனைத்து வித கல்வித் தகுதியினரும் கலந்து கொள்ளலாம்

பங்கேற்கும் நிறுவனங்கள்:

LAYAM GROUP OF COMPANY, TVS COMPANY D VINDHYA E-INFO MEDIA PVT LTD போன்றமுன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர்

34
மதுரையில் வேலைவாய்ப்பு முகாம்

இதே போல மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெறவுள்ளது.

நாள்: 22.08.2025 (வெள்ளிக்கிழமை)

நேரம்: காலை 10 மணி முதல்

இடம்: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் K. புதூர், மதுரை

கல்வி தகுதி என்ன.?

பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர்களும் கலந்து கொண்டு தங்களது தகுதிக்கேற்ப தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுக் கொள்ளலாம்.

முன்னணி தனியார் மருத்துவமனைகள் கலந்து கொண்டு, டிப்ளமோ நர்சிங், லேப் டெக்னீசியன், மருந்தாளுநர், வரவேற்பாளர், மருத்துவமனை உதவியாளர் மற்றும் ஹோம் நர்சிங் போன்ற பல்வேறு பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர்.

தேவைப்படும் சான்றிதழ்கள்

கல்விச் சான்றிதழ்கள்

ஆதார் அட்டை

புகைப்படம்

அனுமதி இலவசம்

44
கோவையில் வேலைவாய்ப்பு முகாம்

இதே போல கோயம்புத்தூர் மாவட்டத்தில் நாளை ( 23,08,2025 சனிக்கிழமை) காலை 08.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி, கோவையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள் என்ன.?

250 க்கும் மேற்பட்ட தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு

15000 த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்

கோவை மற்றும் பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் உள்ள முன்னணி தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு பதிவு வழிகாட்டுதல்கள்

இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகள்,

Read more Photos on
click me!

Recommended Stories