ரயில்வேயில் 14,298 காலிப் பணியிடங்கள்! 10வது முடித்தவர்கள் கூட விண்ணப்பிக்கலாம்!

First Published | Oct 5, 2024, 10:37 AM IST

நாடு முழுவதும் 14,928 டெக்னீசியன் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பை அறிவிப்பை ரயில்வே தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தேர்வாகும் நபர்களுக்கு ரூ.19,900 முதல் ரூ.29,200 வரை சம்பளம் வழங்கப்படும்.

RRB Recruitment Notification

ரயில்வே டெக்னீசியன் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் 14,928 பணியிடங்களுக்குத் தகுதியாவர்கள் தேர்வு செய்யப்பட்ட உள்ளனர். நேரடி நியமன முறையில் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படும். ஆர்வமும் தகுதியும் கொண்டவர்கள் அக்டோபர் 16ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

Railway Recruitment

முதலில் 9144 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானதை அடுத்து, மேலும் 5154 காலிப் பணியிடங்களையும் நிரப்ப இருப்பதாக ரயிர்வே தேர்வு வாரியம் அறிவித்தது. இதனால், விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கெனவே விண்ணப்பித்திருக்கும் நபர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டாம்.

Tap to resize

RRB Technician

Technician Grade - I (Signal)

டெக்னீசியன் கிரேடு I (சிக்னல்) பணியில் 1092 காலியிடங்கள் உள்ளன. B.Sc Physics/ Electronics/ Computer Science/ Information Technology ஆகிய படிப்புகளை முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இதே துறைகளில் டிப்ளமோ அல்லது எஞ்சினியரிங் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

01.07.2024 அன்று 18 முதல் 36 வயதிற்குள் உள்ளவர்கள் மட்டுமே இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும். ஆனால் ஓ.பி.சி. சமூகத்தினருக்கு 3 ஆண்டுகள், எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பு தளர்வும் வழங்கப்படுகிறது. தேர்வுசெய்யப்படும் தகுதியான நபர்களுகுக மாதச் சம்பளம் ரூ.29,200 வரை வழங்கப்படும்.

RRB Recruitment 2024

Technician Grade - III

டெக்னீஷியன் கிரேடு III பணியில் காலியிடங்களின் எண்ணிக்கை 13206. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, ஐ.டி.ஐ. படிப்பை முடித்திருக்க வேண்டும்.

01.07.2024 அன்று 18 வயது முதல் 33 வயதிற்குள் இருப்பதும் அவசியம். ஆனால் ஓ.பி.சி. சமூகத்தினருக்கு 3 ஆண்டுகள், எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பு தளர்வும் வழங்கப்படுகிறது. தேர்வுசெய்யப்படும் தகுதியான நபர்களுகுக மாதச் சம்பளம் ரூ.19,900 வரை வழங்கப்படும்.

Railway Jobs

ரயில்வே இந்தக் காலிப் பணியிடங்களை நிரப்ப கணினித் தேர்வு நடத்தும். இந்தத் தேர்வு கிரேடு வாரியாக தனித்தனியே நடைபெறும். தேர்வு மதிப்பெண் அடிப்படையில், சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளத்தில் இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ. 500. எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கும் பெண்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் ரூ.250 மட்டுமே.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 16.10.2024

இந்த வேலைவாய்ப்பு பற்றி கூடுதல் தகவல்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பைப் பார்த்துக்கொள்ளலாம்.

https://www.rrbchennai.gov.in/downloads/cen-022024/Detailed_CEN_02_2024_English.pdf

Latest Videos

click me!