TNSTC Recruitment: அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாய்ப்பு! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? இதோ முழு விவரம்!

First Published Oct 4, 2024, 11:15 AM IST

Tamilnadu Transport Department: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள 499 தொழிற்பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. விழுப்புரம், சேலம், கோவை, திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் இந்த பணியிடங்கள் உள்ளன. டிகிரி, பொறியியல் மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாட்டின் அரசு போக்குவரத்து கழகங்கள் 8 கோட்டங்களின் 26 மண்டலங்கள் மூலம், 317 பணிமனைகளில் இருந்து 10,129 வழித்தடங்களில் 20,232 பேருந்துகளை இயக்கி பொதுமக்களுக்கு சேவை செய்து வருகின்றன. இதில், சாதாரண பேருந்து, சொகுசு பேருந்து, குளிர்சாதன வசதி மற்றும் கழிவறை உள்ளிட்ட பல்வேறு சொகுசு வசதிகளைக் கொண்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

இந்நிலையில் விழுப்புரம், சேலம், கோவை, திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் 499 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு டிகிரி, பொறியியல் மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான இறுதி நாட்கள் உள்ளிட்ட விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 

Latest Videos


கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு :

தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பதார்கள் பொறியியல்/ தொழில்நுப்ட படிப்புகளில் டிகிரி அல்லது டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும். பொறியியல் அல்லாத பிரிவிற்கு கலை/ அறிவியல்/ வணிகம்/ மனிதநேயம் ஆகிய பாடப்பிரிவுகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கு தொழிற்பயிற்சியின் விதிமுறைகள் படி வயது நிர்ணயிக்கப்படும்.

எந்ததெந்த மாவட்டங்களில் எத்தனை காலி பணியிடங்கள்:

இன்ஜினியரிங்  – 201: மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் – 170, சிவில் இன்ஜினியரிங் – 10, கணினி அறிவியல் மற்றும் பொறியியல் / தகவல் தொழில்நுட்பம் – 12, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் – 9. 

டிப்ளமோ  – 140: மெக்கானிக்கல், ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங் – 125, சிவில் – 5, கணினி அறிவியல் – 7, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் – 3

பொறியியல் அல்லாத தொழில்பயிற்சி – 158: கோவை – 93, நெல்லை – 53, சென்னை – 22 

மாதம் ஊதியம்

தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் தொழிற்பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் பட்டத்தாரிகளுக்கு ரூ.9,000 மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.8,000 உதவித்தொகையாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் www.nats.education.gov.in என்ற இணையத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 21ம் தேதியாகும். தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் அக்டோபர் 28ம் தேதி வெளியிடப்படப்படும். 

click me!