சூப்பரான வேலை வாய்ப்பு! தமிழ் எழுதப் படிக்க தெரிந்தால் போதும்! ரூ.58,600 வரை சம்பளம்!

Published : Mar 09, 2025, 04:56 PM ISTUpdated : Mar 10, 2025, 09:51 AM IST

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 76 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்புலவர், பிளம்பர், காவலர், துப்புரவுப் பணியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மார்ச் 12க்குள் விண்ணப்பிக்கவும்.

PREV
18
சூப்பரான வேலை வாய்ப்பு! தமிழ் எழுதப் படிக்க தெரிந்தால் போதும்! ரூ.58,600 வரை சம்பளம்!
rameswaram temple

தமிழகத்தில் பெரும்பாலான கோவில்கள் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கோவில்களில் அவ்வப்போது காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள புகழ் பெற்ற ராமநாதசுவாமி கோயிலில்  76 காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சம்பளம் மற்றும் கல்வித்தகுதி என்ன என்பதை பார்ப்போம். 

28
Rameswaram temple jobs

பணி விவரம்

ராமேஸ்வரம் பகுதியில் உள்ள ராமநாதசுவாமி கோயிலில் 76 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி, தமிழ்புலவர் 1, பிளம்பர் 1, காவலர் 18,  கருணை இல்லம் காப்பாளர் (பெண்) 1 துப்பரவுப் பணியாளர் பணிக்கு 27, தூர்வை (பெருக்குபவர்) 26, கால்நடை பராமரிப்பு (கோசாலை) 2  என மொத்தம் 76 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 

38
Rameswaram recruitment 2025

வயது வரம்பு

ராமநாதசுவாமி திருக்கோயிலில் உள்ள இப்பணியிடங்களுக்கு 01.07.2025 தேதியின்படி, 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். மேலும் அதிகபடியாக 45 வயதுக்குள் இருக்க வேண்டும். 

48
Educational qualification

கல்வித்தகுதி

பிளம்பர் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட தொழில்துறை பயற்சி நிறுவனத்தில் வழங்கப்பட்ட பிளம்பர் பாடப்பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக சம்மந்தப்பட்ட துறையில் ஐந்து ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

கால்நடை பராமரிப்பாளர், தூர்வை, தூய்மை பணியாளர்கள், காவலர் ஆகிய பணிகளுக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும். தமிழ்புலவர் பணிக்கு 
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் தமிழ் பாடத்தில் எம்ஏ அல்லது எம்.லிட் பட்டம் அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். 

தமிழ்புலவர் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் தமிழ் பாடத்தில் எம்ஏ அல்லது எம்.லிட் பட்டம் அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். 

58
Salary

சம்பளம் விவரம்

தமிழ்புலவர் பணிக்கு மாத சம்பளமாக ரூ.18,500 முதல் ரூ.58,600, பிளம்பர் பணிக்கு மாத சம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.56,900, காவலர் பணிக்கு ரூ.15,900 முதல் ரூ.50,400, காப்பாளர் பணிக்கு ரூ.15,900 முதல் ரூ.50,400 பணிக்கு, தூய்மை பணியாளர் ரூ.10,000 முதல் ரூ.31,500, தூர்வை பணிக்கு ரூ.10,000 முதல் ரூ.31,500 கால்நடை பராமரிப்பாளர் பணிக்கு ரூ.10,000 முதல் ரூ.31,500 வழங்கப்படும்.

68
Government jobs in Rameswaram

தேர்வு செய்யப்படும் முறை

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள். இந்து மதத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.

78
Ramanathaswamy temple vacancies

விண்ணப்பிப்பது எப்படி?

ராமநாதசுவாமி திருக்கோயிலில் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://rameswaramramanathar.hrce.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை அனுப்பும்போது மேல் உறையின் மீது கண்டிப்பாக பதவியின் பெயரை குறிப்பிட்டு பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்பட வேண்டும். விண்ணப்பத்துடன் பிறப்பு சான்றிதழ் அல்லது டிசி / மதிப்பெண் சான்றிதழ்கள், அடையாள அட்டை நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் நேர்முக தேர்வுக்கு அழைப்பாணை அனுப்ப ரூ.25 மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுயவிலாசமிட்ட அஞ்சல் உறையுடனும் இணைத்து அனுப்பப்பட வேண்டும். மேலும் உரிய இணைப்புகள் மற்றும் சுய விலாசமிட்ட அஞ்சல் உறை இல்லாமல் வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

88
rameswaram temple News

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

அனுப்ப வேண்டிய முகவரி
இணை ஆணையர்/செயல் அலுவலர்,
அருள்மிகு ராமநாதசுவாமி கோயில்
ராமேஸ்வரம் – 623526, ராமநாதபுரம் மாவட்டம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்

 மார்ச் 12ம் தேதிக்குள் விண்ணப்ப படிவத்தை அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories