job opportunities: ரூ.1,20,000 வரை சம்பளம்! இன்ஜினியரிங் பட்டதாரி சூப்பர் வேலை வாய்ப்பு!

First Published | Dec 5, 2024, 7:43 PM IST

Power Grid Corporation: பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், டிரைய்னி இன்ஜினியர் பதவிக்கு 22 காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. B.E./ B.Tech / B.Sc பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை.

Power Grid Corporation

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனம் மத்திய மின்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. பொதுத்துறை நிறுவனமான பவர் கிரிட் நிறுவனம், மின்சாரம் பகிர்ந்தளித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறது. பவர் கிரிட் பொதுத்துறை நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு அவ்வப்போது வெளியிடப்பட்டு நிரப்பப்பட்டு வருகிறது. 

job opportunities

இந்நிலையில் எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு மற்றும் சம்பளம், கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. டிரைய்னி இன்ஜினியர் பதவிக்கு மொத்தம் 22 காலிப்பணியிடங்கள் நிரப்பபப்டுகிறது. இதில் பொதுப் பிரிவில் 11, பொருளாதாரப் பிரிவில் 2 இடங்கள், ஒபிசி பிரிவில் 5 இடங்கள், எஸ்சி பிரிவில் 3 இடங்கள், எஸ்டி பிரிவில் 1 இடம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 1 என மொத்தம் 22 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

Tap to resize

Power Grid Corporation Job

கல்வி தகுதி

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E./ B.Tech / B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்களின் 28 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள் வரையும் வயது வரம்பில் தளர்வு உள்ளது.

Salary

சம்பள விவரம்

டிரைய்னி இன்ஜினியர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 1 ஆண்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். இப்பதவிக்கு ரூ.30,000 முதல் ரூ.1,20,000 சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை

இப்பணியிடங்களுக்கு கேட் 2024 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், தனிப்பட்ட மதிப்பீடு, குழு விவாதம் மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

job opportunities News

விண்ணப்பிக்கும் முறை

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.powergrid.in/en/job-opportunities என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். 

Power Grid Corporation of India

விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. 

விண்ணப்பிக்க கடைசி நாள்

டிசம்பர் 19ம் தேதி 

Latest Videos

click me!