PM Vidyalaxmi Scheme
எந்தவொரு இளைஞரும் மேல்படிப்பைத் தொடர நிதி ஒரு தடையாக இருக்காது என்பதை உறுதி செய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், சிறந்த 860 உயர்கல்வி நிறுவனங்களில் (QHEIs) சேரும் மாணவர்களுக்கு பிணையமில்லாத கடன் வழங்கப்படும்.
PM Vidyalaxmi Yojana
எளிமையாக வடிவமைக்கப்பட்ட இத்திட்டத்தில் வெளிப்படைத்தன்மையுடன் முற்றிலும் டிஜிட்டல் முறையில் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு 75% கடன் உத்தரவாதத்தை வழங்கும். அதாவது, 7.5 லட்சம் ரூபாய் வரையிலான கடனுக்கு மத்திய அரசின் உத்தரவாதம் கிடைக்கும். இதனால் வங்கிகள் அதிக நம்பிக்கையுடன் மாணவர்களுக்குக் கடன்களை வழங்க முன்வரலாம்.
PM Vidyalaxmi Scheme Education Loan
ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் வரை உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் இத்திட்டத்தில் பயன் பெறலாம். .10 லட்சம் வரையிலான கடனுக்கு 3% வட்டி மானியமும் கிடைக்கும்.
PM Vidyalaxmi Scheme Collateral-free loan
இத்திட்டத்தில் அரசு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மற்றும் தொழில்நுட்ப / தொழில்முறைப் படிப்புகளைத் தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 2024-25 முதல் 2030-31 வரை ரூ.3,600 கோடி இத்திட்டத்திற்காகச் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் 7 லட்சம் மாணவர்கள் இந்த வட்டி மானியத்தின் பலனைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
PM Vidyalaxmi Scheme interest subvention
ஆண்டுக்கு ரூ. 4.5 லட்சம் வரை வருவாய் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு முழு வட்டி மானியம் வழங்கும் தற்போதைய திட்டங்களின் அடிப்படையில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது. தரமான உயர்கல்வியை உறுதி செய்வதற்கான மத்திய அரசின் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாகவும் வித்யாலக்ஷ்மி திட்டம் உள்ளது.
PM Vidyalaxmi Scheme Eligibility
உயர்கல்வித் துறை சார்பில் வித்யாலக்ஷ்மி திட்டத்திற்கான ஆன்லைன் போர்ட்டல் உருவாக்கப்படும். அதில் மாணவர்கள் கல்விக் கடனுக்கும் வட்டி மானியத்திற்கும் விண்ணப்பிக்க முடியும். ஈ-வவுச்சர் மற்றும் சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி (CBDC) வாலட்கள் மூலம் வட்டி மானியம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.