மாணவர்களுக்கு ஒரு ஜாக்பாட்! ONGC-யில் 2623 காலியிடங்கள்: தேர்வு கிடையாது, மதிப்பெண் அடிப்படையில் வேலை உறுதி!

Published : Oct 22, 2025, 08:37 PM IST

ONGC நிறுவனத்தில் 2623 அப்ரண்டிஸ் பணியிடங்கள் அறிவிப்பு. 10 ஆம் வகுப்பு முதல் B.Tech வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை, மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம். கடைசி தேதி: 06.11.2025.

PREV
15
மத்திய அரசு நிறுவனத்தில் மெகா வேலைவாய்ப்பு

இந்தியாவின் புகழ்பெற்ற எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகமான ONGC (Oil and Natural Gas Corporation)-யில் காலியாக உள்ள 2623 அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. மத்திய அரசுத் துறையில் வேலை தேடும் இளைஞர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும். இந்தப் பணியிடங்கள் இந்தியா முழுவதும் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி 06.11.2025 ஆகும்.

25
பணியிடம் மற்றும் ஊதிய விவரங்கள்

நிறுவனம் அப்ரண்டிஸ் (Apprentice) பதவிக்கு ஆட்களைத் தேர்வு செய்கிறது. இந்தப் பதவிக்கான மாதாந்திர ஊதியம் ரூ.8,200 முதல் ரூ.12,300 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை என்பது ஒரு கூடுதல் சிறப்பாகும்.

35
கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு தளர்வு

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ITI, டிப்ளமோ, ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் (Degree), B.E/B.Tech எனப் பல்வேறு பிரிவுகளில் கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 24 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி, SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு (PwBD) அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

45
தேர்வு முறை: தேர்வு இல்லை, மதிப்பெண் மட்டுமே

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எந்தவிதமான எழுத்துத் தேர்வுகளையும் (Exam) சந்திக்க வேண்டியதில்லை. விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் பட்டியல் (Merit List) அடிப்படையில் மட்டுமே நேரடியாகத் தேர்வு செய்யப்படுவார்கள். முதற்கட்டத் தேர்வு முடிந்தவுடன், விண்ணப்பதாரர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification) நடைபெறும். விண்ணப்ப செயல்முறை ஏற்கனவே 16.10.2025 அன்று தொடங்கிவிட்டது.

55
விண்ணப்பிக்கும் எளிய முறை

தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://ongcindia.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்கும் முன், கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள அனைத்துத் தகுதிகளையும், நிபந்தனைகளையும் முழுமையாகப் படித்து உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Read more Photos on
click me!

Recommended Stories