மாதம் ரூ.1.50 இலட்சம் சம்பளத்தில் 12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தேசிய நாடகப் பள்ளியில் வேலை

Published : Apr 17, 2025, 10:37 PM IST

தேசிய நாடகப் பள்ளி (NSD) பல்வேறு வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது. இதில் Lower Division Clerk (LDC) பணியிடங்களுக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். உடனே விண்ணப்பியுங்கள்!  

PREV
19
மாதம் ரூ.1.50 இலட்சம் சம்பளத்தில் 12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தேசிய நாடகப் பள்ளியில் வேலை

தேசிய நாடகப் பள்ளி (National School of Drama - NSD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்குக் கூட வாய்ப்பளிக்கும் கிளார்க் பணியிடங்களும் இதில் அடங்கும். இந்த வேலைவாய்ப்பு குறித்த முழு விவரங்களை இப்போது பார்க்கலாம்.

29

காலியிட விவரங்கள்:
தேசிய நாடகப் பள்ளியில் Accounts Officer, Assistant Registrar, Assistant Light and Sound Technician, Assistant Wardrobe Supervisor மற்றும் Lower Division Clerk ஆகிய பல்வேறு பதவிகளில் மொத்தம் 11 காலியிடங்கள் உள்ளன. ஒவ்வொரு பதவிக்கும் தேவையான கல்வித் தகுதி, சம்பளம் மற்றும் பிற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
 

39

Accounts Officer:
⦁        சம்பளம்: மாதம் ரூ.47,600 - 1,51,100
⦁        காலியிடங்கள்: 01
⦁        கல்வித் தகுதி: B.Com, கணினி அறிவு மற்றும் நிர்வாக அனுபவம் தேவை.
 

49

Assistant Registrar:
⦁        சம்பளம்: மாதம் ரூ.44,900 - 1,42,400
⦁        காலியிடங்கள்: 02
⦁        கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் மற்றும் நிர்வாக அனுபவம் தேவை.
 

59
job

Assistant Light and Sound Technician:
⦁        சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400
⦁        காலியிடங்கள்: 01
⦁        கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, மின் துறையில் டிப்ளமோ அல்லது ஒலி தொழில்நுட்பத்தில் பட்டம்/டிப்ளமோ மற்றும் அனுபவம் தேவை.

69

Assistant Wardrobe Supervisor:
⦁        சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400
⦁        காலியிடங்கள்: 01
⦁        கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, கட்டிங்/தையல் டிப்ளமோ மற்றும் அனுபவம் தேவை.
 

79

Lower Division Clerk (LDC):
⦁        * சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
⦁        * காலியிடங்கள்: 06
⦁        * கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் கணினி தட்டச்சு திறன் (ஆங்கிலத்தில் 35 w.p.m அல்லது இந்தியில் 30 w.p.m) அவசியம்.
 

89

வயது வரம்பு:
ஒவ்வொரு பதவிக்கும் வயது வரம்பு மாறுபடுகிறது. பொதுவாக 18 வயது முதல் 56 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது தளர்வு உண்டு.

தேர்வு முறை:
தேர்வு செயல்முறையில் Skill Test/எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவை அடங்கும்.

விண்ணப்பக் கட்டணம்:
⦁     SC/ST/Ex-s/PWD விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.
⦁     OBC (Non Creamy Layer) விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250.
⦁    *மற்ற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500.

99

முக்கிய தேதிகள்:
⦁    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 14.04.2025
⦁    விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.04.2025

விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான நபர்கள் [https://recruitment.nsd.gov.in/](https://recruitment.nsd.gov.in/) என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகுதிகளையும் கவனமாக படித்து உறுதி செய்து கொள்ளவும்.
இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்! தேசிய நாடகப் பள்ளியில் பணியாற்ற இது ஒரு சிறந்த வாய்ப்பு.

இதையும் படிங்க: 12வது முடித்திருக்கீங்களா? தமிழ்நாடு அரசில் ₹25,000 சம்பளத்தில் வேலை!

Read more Photos on
click me!

Recommended Stories